இப்போதெல்லாம் தமிழில் நல்ல படங்களே வருவதில்லை ; அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார். ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாமல் வலம் வந்து கொண்டிருந்தவருக்கு அமீர் மூலம் லக் அடித்தது. பருத்திவீரன் படத்தின் முத்தழகுவாக நடித்த ப்ரியாமணியின் நடிப்பை பார்த்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் அம்மணிக்கு தூது விட்டனர். ஆனால் அம்மணியோ... நல்ல கதை இருந்தால்தான் நடிப்பேன் என்று கூறி ஒரு சில குப்பை படங்களில் கமிட் ஆகி மண்ணை கவ்வினார். அதேநேரம் தமிழில் காட்டாத கவர்ச்சியையெல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு காட்டியதாலோ என்னவோ... அங்கு ஹிட் நாயகியானார் ப்ரியாமணி.
தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பட வேட்டைகளில் ஈடுபட்டு வரும் அம்மணி, தமிழ் படங்களில் நடிக்காததற்கு சொல்லியிருக்கும் காரணம், ஆர்யா விவகாரம் அளவுக்கு இன்னமும் பூதாகரமாக வெடிக்காவிட்டாலும் ; அப்படியொரு சூழ்நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதெல்லாம் தமிழில் நல்ல படங்களே வருவதில்லை ; அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று ப்ரியாமணி சொன்னது இன்னமும் வி.சி.குகநாதன் போன்ற தமிழ் மற்றும் தமிழ் சினிமா ஆர்வலர்களின் காதில் விழவில்லை போலும்!.
No comments:
Post a Comment