Friday, December 3, 2010

என் வளர்ச்சிக்குக் காரணம் தமிழ்த் திரையுலகம்தான் - ஆர்யா

Tamil cinema world is the main reason for my growth

என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கும். என்னை ஆளாக்கி ஆதரித்துக் ‌கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.
எந்த பிரச்னைகளுக்குள்ளும் போகாமல் நடிப்புத் தொழிலில் மட்டுமே முழுமையாக மனதை ஈடுபடுத்திக் ‌கொண்டிருக்கும் என்னைப் பற்றி
கடந்த ஒரு வார காலமாக சில விமர்சனங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப் படித்திருப்பீர்கள் அது குறித்து என் உண்மை நிலையை விளக்குவது தான் இந்த அறிக்கையின் நோக்கம்.
பிரச்சனைக்குள்ளான அந்த துபாய் மேடை உட்பட பல மேடைகளில் இன்று எனக்கு இடம் கொடுக்கிறாரகள் என்றால் அதற்கு முழு முதற்காரணமே தமிழ்த் திரை ரசிகர்கள் எனக்குத்  தந்திருக்கும் அங்கீகாரம்தான் என்ற அடிப்படையை அறியாதவன் அல்ல நான்.
நான் அறிமுகமான "உள்ளம் கேட்குமே" படத்தில் என்னை உற்சாகப்படுத்தி "நான் கடவுள் " படத்தில் என்னை நடிகனாக அங்கீகரித்து "மதராச பட்டினம்" படத்தில் எனக்கு ஒரு தனி அடையாளத்தைத் தந்து "பாஸ் என்கிற பாஸ்கரன்" நடத்தில் என்னை வெற்றிக்கதாநாயகனாக்கிய தமிழ் ரசிகர்களின் ஆதரவிற்கும், எல்லையில்லா அன்பிற்கும், அளவு கடந்த பாசத்திற்கும் காலம் பூராவும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

தமிழ்த் திரையுலகம் எனக்குத் தொடர்ந்து தந்து வரும் வரவேற்புதான் திரையுலகில் இன்று என் சுவாசம் என்பதை நன்கறிந்த நான் தமிழ்த் திரையுலகைப் பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத் துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பதுதான் உண்மை. நான்‌ அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை என்பதை பணிவன்போடு உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவை எல்லாவற்றையும் மீறி என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தங்களை இதய சுத்தியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்காக குரல் கொடுத்த நடிகர் சங்கத்தினருக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் இதய பூர்வமான நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.நடிகன் என்ற நிலையில் ஆரம்ப படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்திட வேண்டிக்கொள்கிறேன்.(dinamalar) 

No comments:

Post a Comment