முதல்வர் கருணாநிதியின் பேரனும், சினிமா தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நாயகன் அவதாரம் எடுக்கப்போகும் செய்தி ஏற்கனவே அறிந்த செய்திதான். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு
ஒரு கல் ஒரு கண்ணாடி என்று பெயர் சூட்டியிருக்கிறார் படத்தின் டைரக்டர் எம்.ராஜேஷ். அதாவது ஓ.கே.ஓ.கே. என சுருக்கமாக சொல்லும் வகையில் படத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சூட்டிங் தொடங்கவுள்ள நிலையில் படத்துக்கான போட்டோசெஷன் கடந்த வாரம் நடந்தது. சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்த போட்டோசெஷனில் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாயகி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் உற்சாகத்துடன் ரொமான்ஸ் போஸ் கொடுத்தனர்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் சந்தானம் முக்கிய பாத்திரமேற்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். இந்த படத்தை ஜூலை மாதம் திரையிடும் திட்டத்துடன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் சூட்டிங் நடத்தப்படுகிறது. பாடல் காட்சிகளுக்கு வெளிநாட்டுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.(dinamalar)
No comments:
Post a Comment