Wednesday, December 1, 2010

வனிதா புகார்: அருண் விஜய் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு

FIR filed against actor arun vijay











நடிகை வனிதா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரை அடுத்து, நடிகர் அருண் விஜய் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர்,
தன் இரண்டாவது கணவர் ஆனந்தராஜன் மற்றும் குழந்தைகளுடன், நுங்கம்பாக்கம், கோத்தாரி சாலையில் உள்ள, "மரியம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  கடந்த 7ம் தேதி, குடும்பத் தகராறு தொடர்பாக, நடிகர் விஜயகுமார், தாய் மஞ்சுளா, சகோதரர் அருண் விஜய் மீது, கடந்த 7ம் தேதி மதுரவாயல் போலீசில்,  வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். கடந்த 20ம் தேதி மதுரவாயல் போலீசில் மகள், மருமகன் மீது நடிகர் விஜயகுமார் புகார் செய்தார்.  மருமகன் ஆனந்தராஜன் கைது செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து, டி.ஜி.பி., அலுவலகம், அமெரிக்க தூதரகத்தில் வனிதா புகார் அளித்தார். மதுரவாயல் போலீசில் விஜயகுமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்வதற்கான வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.  தொடர்ந்து, மதுரவாயல் போலீசில்  தந்தையும், மகளும் அளித்த புகார்கள் தொடர்பான வழக்குகள், புறநகர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. தொடர்ந்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து, வனிதா அளித்த விளக்கத்தை அடுத்து, புகாரை விசாரிக்க, துணைகமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்த வனிதா விஜயகுமார், சகோதரர் அருண் விஜய் உள்ளிட்ட நால்வர், தனக்கும், குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார்.  புகாரை, நுங்கம்பாக்கம் போலீசிற்கு கமிஷனர் பரிந்துரைத்தார். நுங்கம்பாக்கம் போலீசார், அருண் விஜய் மற்றும் மூவர் மீது கொலை மிரட்டல், வீடு புகுந்து தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அருண் விஜய் மீது ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் அவரை கைது செய்ய முடியாமல் புறநகர் போலீசார் தவித்து வருகின்றனர்.

இப்போது, நுங்கம்பாக்கம் போலீசாரும் தன் பங்கிற்கு அருண் விஜய் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  எனவே, அருண் விஜய் தமிழகம் வந்தால், இரண்டு போலீசும் கைது செய்ய வாய்ப்புள்ளது. கைது நடவடிக்கையை தடுக்க அருண் விஜய், தந்தை விஜயகுமார் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்கு விஜயகுமார் வீட்டின் நெருங்கிய உறவினர் ஒருவர் தான் காரணகர்த்தா என கூறப்படுகிறது. அவர், தன் நோக்கம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் பிரச்னையை அமைதியாக கவனித்து வருவதாகவும், பிரச்னையை இன்னும் பெரிதாக்க காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. (dinamalar)

No comments:

Post a Comment