"மைனா' வெற்றிக்குப் பின் ஏ.ஆர்.முருகதாஸ் படம், விக்ரம், ஆர்யாவுக்கு ஜோடி என பெரிய படங்களின் நாயகியாக பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறார் அமலாபால்.
"மைனா' தந்து போன அனுபவம்?
நிறைய தந்திருக்கு. என் கேரியரில் அதிக சந்தோஷத்தை உணர்ந்த தருணங்களுக்கு காரணம் "மைனா'தான். முதல் படத்தில் கொஞ்சம் சறுக்கல். ஆனால் எல்லாவற்றையும் "மைனா' மாற்றி எழுதியிருக்கு. இந்த நேரம் எனக்குன்னு ஒரு உலகம் அமைஞ்சிருக்கு. எல்லோரும் பாராட்டி விட்டார்கள். வாழ்த்துகள் சொல்லி நிறைய போன் கால்ஸ்.
இன்பாக்ஸ் நிறைய நிறைய எஸ்எம்எஸ். கதவைத் தட்டி ""ரஜினி சார் கொடுத்தாருன்னு'' ஒரு பொக்கே தர்றாங்க. ""வாழ்த்துகள் அமலா''ன்னு எழுதி ரஜினி சார் கையெழுத்து போட்டிருக்கார். அப்படியே கண்கள் கலங்க அம்மாகிட்டே காட்டுறேன். அம்மாவும் கண் கலங்கி நிற்கிறாங்க. இது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். நினைச்சு பார்க்கவே இல்லை.
அந்தத் தருணத்தை இப்போ நினைச்சுப் பார்த்தா சந்தோஷமும், அழுகையும் கலந்து வருது. இனி என் கேரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நானே தீர்மானிச்சுட்டேன். சினிமான்னு கேரளத்தில் இருந்து வந்த இரண்டாவது வருஷமே பெரிய ஸ்கோப் தந்துட்டாங்க. அதை அப்படியே சினிமாவை நினைச்சு வாழ்ற காலம் வரைக்கும் காப்பாத்துணும்.
"மைனா'வுக்காக அந்த மலைக்காடுகளில் திரிந்த காலங்கள், பழகிய மக்கள் என எல்லோருக்கும் நன்றி. காலத்துக்கு நன்றி சொல்ல வைத்த பிரபு சாலமனுக்கு பெரிய நன்றி.
"சிந்து சமவெளி' பற்றி பேசவே மறுக்கிறீர்களாமே?
அதை மறக்கவே நினைக்கிறேன். வசனங்கள் புரியாத நேரத்தில் நானே அப்படி பேசியிருக்கேன். அந்தப் படத்தை நினைத்தால் என் மீது எனக்கே கோபம். சொந்த வாழ்க்கையில் எப்படியோ அப்படியேதான் சினிமாவிலும் இருக்கணும்னு சென்னை வந்தேன்.
இதோ இப்போ கேரளத்திலும் "மைனா'வால் நல்ல பெயர் கிடைச்சிருக்கு. அப்படியே வாழ்ந்திடணும். அதைப் பற்றி நிறைய பேச வேண்டாம். "சிந்து சமவெளி' வாய்ப்பு தந்த இயக்குநர் சாமி சாருக்கு நன்றி.
ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரம், ஆர்யா என பெரிய படங்களில் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாமே?
ஏ.ஆர்.முருகதாஸ் சார் தயாரிக்க போகிற படத்துக்கு என்னை அழைத்து கதை சொன்னார். யாருக்கும் இவ்வளவு சீக்கிரம் கிடைக்காத வாய்ப்பு இது. ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். விக்ரம் சார் படத்துக்கு பேசினாங்க.
நான் விக்ரம் சாரின் பெரிய ரசிகை. "சேது' முதல் "ராவணன்' வரை எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். சினிமாவுக்கு வந்த பின் இந்த இந்த நடிகர்களுடன் ஜோடி சேரணும்னு ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன்.
அதில் விக்ரம் முக்கியமானவர். ஆர்யாவின் "வேட்டை' படத்தில் நடிக்கிறேன். லிங்குசாமி இயக்குகிறார். எல்லாமே நல்ல கதைகள். நிச்சயம் நன்றாக நடிப்பேன் என நம்பிக்கை இருக்கு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக இருந்து வருவது உங்கள் ஊர் பெண்கள்தான். அப்போ அந்த இடம் உங்களுக்கும் பிடிக்கும்தானே?
யாருக்குத்தான் பிடிக்காது. இந்த நிமிஷம் வரை என் கால்ஷீட்டுக்கு யாரும் காத்திருக்கவில்லை. கால்ஷீட் தந்து அட்வான்ஸ் வாங்கி யாரையும் ஏமாற்றவில்லை.
ஒரே ஹிட். நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இதுதான் அடுத்த சினிமாவிலும் நான் எதிர்பார்க்கிறேன். தொடர் புகழ், பணம் எதிலும் நம்பிக்கையில்லை. எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரஸா கல்லூரியில் பி.ஏ. படிக்கும் மாணவி நான்.
இப்போதைக்கு லீவு சொல்லி விட்டுதான் ஷூட்டிங் வருகிறேன். பரபரப்பு எப்போதும் என்னை தொற்றிக் கொள்ள அனுமதிக்க மாட்டேன். அடுத்த படத்திலும் ரஜினி சார் என்னை வாழ்த்தணும் அவ்வளவுதான்.(dinamani)

No comments:
Post a Comment