
தனது குண்டு உடம்பால் ரசிகர்களை கவர்ந்து காமெடியில் கலக்கிய நடிகர் குண்டுகல்யாணம் டைரக்டர் அவதாரம் எடுத்து நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற படத்தை இயக்கி வருவது தெரிந்ததே. குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் குழந்தைகளை கவரும் காட்சிகளோடு,
குழந்தைகளுக்கு தேசப்பற்றை புகட்டும் வகையிலான பாடல் ஒன்றும் இடம்பெறுகிறதாம். "எங்கள் திருநாடு... என்று சொல்லி பாடு... சின்ன சின்ன பிள்ளைகளே சேர்ந்து பாடுங்கள்... உன்னையறிந்தால் நீ உயர்ந்திடுவாய்... பாரதத்தின் மேன்மைகளை பாடி ஆடுவோம்..." எனத் தொடங்கி தொடருகிறது அந்த பாடல். இந்த பாடலை சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் போட்டுக் காட்டியிருக்கிறார் குண்டுகல்யாணம். பாடலை கேட்ட அப்துல்கலாம், குண்டுகல்யாணத்தின் தேசப்பற்றை பாராட்டியதுடன், நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி படத்தைப் பற்றியும் கேட்டுள்ளார். வழக்கம்போல நெற்றி நிறைய குங்குமப் பொட்டுடன் சென்றிருந்த குண்டு கல்யாணத்தைப் பார்த்து, அப்துல்கலாம் "உங்களுக்கு இந்த பொட்டு நல்லா இருக்கு" என்றும் கூறி பாராட்டியிருக்கிறார். குண்டுகல்யாணத்துடன் அவரது மகள் ஜனனியும் சென்றிருந்தார். ஜனனியும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment