பாலிவுட் முன்னாள் ஹீரோயின் மாதுரி தீக்ஷித், திருமணத்துக்குப் பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இதையடுத்து
கடந்த 3 வருடங்களுக்கு முன் ‘ஆஜா நாச்லே’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஹிட்டாகவில்லை. இதையடுத்து அமெரிக்கா சென்ற மாதுரி, இப்போது டி.வி நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராக பங்கேற்க மும்பை திரும்பியுள்ளார். அவர் கூறியதாவது:
எனக்கு இரண்டு வீடுகள் மாதிரி இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா. மற்றொன்று இந்தியா. இங்கு வரும் போது என் குழந்தைகளையும் கணவரையும் நினைத்துக்கொண்டிருப்பேன். அங்கு சென்றால் இந்திய சினிமாவையும் என் நண்பர்களையும் நினைப்பேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடித்த, ‘ஆஜா நாச்லே’ படம் சரியாக ஓடவில்லை. இதற்காக வருந்தியதில்லை. நான் நடித்த எந்த படம் ஓடவில்லையென்றாலும் அதற்காக வருந்தமாட்டேன். ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இது ஹிட்டாக வேண்டும் என்றுதான் நடிக்கிறோம். அதற்காக உழைப்பை கொடுக்கிறோம். அதையும் மீறி படம் ஓடவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும். இதில் வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது?(dinakaran)
No comments:
Post a Comment