Friday, December 3, 2010

தமிழ் திரைப்படத்தில் நடிக்கிறார் எடியூரப்பா

Yeddyurappa Acts in Tamil Cinema

கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழில் தயாரிக்கப்பட உள்ள பக்தி திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக எடியூரப்பாதலைமையிலான பா.ஜ., அரசு, பல்வேறு அரசியல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.  ஆனால்,
இவரது ஆட்சிக்கு எதிராக கர்நாடகாவில் அடிக்கடி பிரச்னைகள் இருந்து வரும் நிலையிலும் எடியூரப்பா ஆன்மிக பயணம் மேற்கொண்டு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உட்பட பல முக்கிய கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து, தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் திறமைசாலியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில், மாநில முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என திறம்பட அரசியல் நடத்தி வரும் எடியூரப்பா, கடந்த இரண்டு மாத காலத்தில் தனது அமைச்சரவை சகாக்கள், கட்சி எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்புகளை சமாளித்தபடி, பெங்களூருக்கும், டில்லிக்கும் இடையே இடைவெளியில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இவ்வளவு பரபரப்பான வாழ்க்கைக்கு இடையில், தமிழில் பக்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Iய்யப்ப சுவாமிகள் மகிமைகளை பக்தர்களிடையே பரப்புகின்ற வகையில், "உலக ரக்ஷகன் (லோக ரக்ஷகன்) என்ற பெயரில் இப்படம் தமிழ் சினிமாவாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் எடியூரப்பாவுடன் பிரபல தொழிலதிபரும், கிங் பிஷர் ஏர்வேஸ் நிறுவன உரிமையாளரும் எம்.பி.,யுமான விஜய் மல்லைய்யா, சபரிமலை Iய்யப்ப சுவாமி கோவிலின் தர்மகர்த்தாவின் மகன் பிரம்மதத்தன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்; 33 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடவும் இதன் தயாரிப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில், 200 பின்னணி பாடகர்கள் பக்தி பாடல்களை பாட உள்ளனர். 50 பாடலாசிரியர்கள் பாடல்களை இயற்றி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இப்படம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது உறுதி என, இப்பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கர்நாடக மாநில அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடியூரப்பா படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத நிலையில், "பிசியாக இருப்பதால், "உலக ரக்ஷகன் படத் தயாரிப்பு பணிகள் தாமதமாகி வருவதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.(dinamalar) 

No comments:

Post a Comment