நன்றிக்கும், சினிமாவுக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டைரக்டர் லிங்குசாமிக்கு அப்படியொரு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தமன்னா.
"பையா" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியவர் தமன்னா. இப்படத்தை டைரக்டர் லிங்குசாமி இயக்கி இருந்தார். முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. படத்தில் அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் வரிசையாக நயன்தாராவின் படங்கள் சரியாக ஓடாததால் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார் லிங்குசாமி. ஆனால் அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இறுதியில் நயன்தாரா நீக்கப்பட்டார். பிறகு தமன்னாவை நடிக்க வைத்தார். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்போது பிரச்சனை என்னவென்றால் லிங்குசாமி தான் அடுத்து இயக்கும் "வேட்டை" படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டுருந்தார். இதற்காக தமன்னாவிடம் அணுகினார். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத் தொகையை கேட்டு அதிர்ந்து போனார் லிங்குசாமி. தமன்னா கேட்ட அவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாததால், அமலா பாலை "வேட்டை" படத்தின் நாயகியாக்கியுள்ளார்.
"பையா" படத்தில் தமன்னாவை நடிக்க வைத்ததால், தன்னுடைய "வேட்டை" படத்தில் சம்பளத்தை குறைத்து நடித்து தருவார் என்று எதிர்பார்த்திருந்தார் லிங்குசாமி. ஆனால் அவருக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் மிஞ்சியது.
சினிமாவில் (வாழ்க்கையில்) ஏற்றம் தந்தவர்களை கண்டு கொள்ளாமல் போவது, தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்பது, தமன்னா விஷயத்தில் உண்மையாகிவிட்டது.
No comments:
Post a Comment