ரஜினிகாந்துக்கும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்துக்கும் அறுபதாம் கல்யாணம் வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிகிழமை) நடைபெறுகிறது. வருகிற 12 ஆம் தேதி ரஜினிக்கு 60 வயது முடிவடைந்து 61 ஆவது வயது பிறக்கிறது.
இதன்படி அறுபதாம் கல்யாணம் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவர்களின் வீட்டில் நடக்கிறது. அன்று காலை 10 ௦ மணிக்கு நிகழ்சிகள் தொடங்குகிறது. புரோகிதர்கள் மந்திரம் ஊத, மங்கள வாத்தியங்கள் முழங்க அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. இந்த விழாவில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment