
புத்தாண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு சினிமா உலகினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு வந்த பெரிய வாய்ப்பு ஒன்றை மறுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு தினத்தில் இரவு நடனம் ஆட வேண்டும். கால்ஷீட் தந்தால் ரூ.3 கோடி தரத் தயார் என பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்பு கதவை தட்டியது. ஆனால் அதை அவர் நிராகரித்தார். "தொகை பெரிதுதான். ஆனால் சமீப காலமாக வெளிநாடு, படப்பிடிப்பு என்று குடும்பத்தை பிரிந்திருக்கிறேன். புத்தாண்டு தினத்திலாவது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை. அன்று குடும்பத்துடன் வெளிநாடு செல்லவும் திட்டமுள்ளது" என்கிறார் பிரியங்கா சோப்ரா.(dinakaran)
No comments:
Post a Comment