Sunday, November 28, 2010

தமன்னா வெற்றிக்கு உதவியது எது தெரியுமா?

Actress Thamana change her name as Thamannaa











கேடி படத்தில் அறிமுகமானபோது புதுமுகங்களில் பத்தோடு ஒன்றாக பல்லிழித்துக் கொண்டிருந்த தமன்னாவின் மார்க்கெட் இப்போது உச்சத்தை தொட்டுத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் வேண்டும், முன்னணி ஹீரோக்களுடன்தான் நடிப்பேன், விருப்பம் இருந்தால்தான் கவர்ச்சி காட்டுவேன் என்று கண்டிஷன்களை அடுக்கிக் கொண்டே போனாலும்,

எச்ஐவி குழந்தைகளுக்கு உதவ கமல் புது முடிவு!

Kamalhasan to act in ad films to help HIV childrens















எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நடிகர் கமல்ஹாசன் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,

நான் யாருக்கு பிறந்தேன்? விஜயகுமாருக்கு மகள் கேள்வி!

Vanitha vijayakumar latest update news















நான் உங்கள் ரத்தம் இல்லை என்றால், யாருடைய மகள், யாருக்கு பிறந்தேன் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று நடிகர் விஜயகுமாரிடம் அவரது மகள் வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன்; சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.
வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி :-

Wednesday, November 24, 2010

அறிமுக நடிகை அலட்டாமல் கொடுத்த லிப் டூ லிப்!

Newface Actress Lip To Lip Kissing











அறிமுக நடிகையொருவர் எந்தவித அலட்டலும் இல்லாமல் லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். பாப்புலரான நடிகைகளே உதட்‌டோடு உதடு பதிக்கும் முத்தக்காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள்.

த்ரிஷாவின் லிப் டூ லிப் முத்தத்தை மறுத்த நடிகர்!



Pawan Kalyan refuses to Trisha kiss











நடிகை த்ரிஷாவின் முத்தத்தை பிரபல தெலுங்கு நடிகர் மறுத்துள்ளார். இந்தியில் சக்கைபோடு போட்ட லவ் ஆஜ் கல் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.

விஜயகாந்துக்கு விருதகிரியா? விருதே குறியா?



virudhagiri audio launch
 










அரசியல் அவதாரம் எடுத்தது போன்று விஜயகாந்த், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் விருதரிரி (எம்.ஜி.ஆர்.) அரசியலில் அடியெடுத்து வைத்தபின் டைரக்டர் ஆனது மாதிரி

நடிகர் விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்!



Vijayakanth to bo honoured with doctorate











அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம்

என்னை அழ வைக்கிறார்கள் : கலகல வடிவேலு கண்ணீர்!



Comedian Vadivelu sues on Comedian Singamuthu in saidapet court











எல்லாரையும் சிரிக்க வெச்ச என்னை அழ ‌வைக்கிறாங்க... என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். ரூ.7 கோடி நில மோசடி குறி்த்து ஏற்கனவே சக காமெடி நடிகர் சிங்கமுத்து மீது போலீசில் புகார் செய்த வடிவேலு, நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,

ரகசியங்களை வெளியிடுவேன்-வனிதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் விஜயகுமார் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தால், அவரை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா ஆவேசமாக கூறினார். டிவி நடிகர் ஆகாஷை விவாகரத்து செய்த பிறகு ஆனந்தராஜன் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்தார்.

விஜய்யின் காவலனுக்கு கோர்ட் இடைக்கால தடை



Chennai HC stays release of Vijay film














நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த காவலன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் சிங்கப்பூரை சேர்ந்த தந்தாரா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற ஜெரோம் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

Friday, November 19, 2010

சிகரெட் விளம்பரம் : இசையமைப்பாளர்களுக்கு நோட்டீஸ்!

Notice to Music directors
பிரபல சிகரெட் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டின் அடுத்த இசைப்புயல் நீங்களா? என்ற விளம்பரத்தை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டது. இசை நிகழ்ச்சி நடத்தி சிகரெட் பிராண்ட்டை பிரபலப்படுத்தும் வகையில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. இசை நிகழ்ச்சிகள் மூலம் புகைப்பழக்கம் திணிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அப்போதே அறிக்கை விட்டார். இந்நிலையில் மேற்படி இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடைச்சட்டம் 2003 பிரிவு 5ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். சென்னை நகரில் பல இடங்களில் போர் தமிழ்நாட்டின் அடுத்த இசைப்புயல் நீங்களா? என்ற விளம்பரம் பல கடைகளில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த இசை நிகழ்ச்சிக்காக நுழைவுச்சீட்டுகளும் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் பெறப்பட்டது.

அதன் அடிப்படையில் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர்களால் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மேற்படி ஆய்வில் கடந்த ஜனவரி மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் சென்னை கோடம்பாக்கம் பத்மராம் மகால், தியாகராயநகர் விஜயமகால் ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடகர் கார்த்திக், பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் பாடகர் ரஞ்சித், பாடகி மாதங்கி ஆகியோர் கலந்து கொள்ள போவதாகவும் தெரியவந்துள்ளது. சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள நிறுவனத்திற்கு இந்த இசை நிகழ்ச்சிகளை நிறுத்தகோரி சட்டப்பூர்வமான அறிவிப்பு கடிதம் அளித்துள்ளது.

மேலும் கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கும், அடுத்து நடக்கவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த இசையமைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.(dinamalar)

இயக்குனர் ஆகிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன்!

SS Kumaran turns director
தமிழ் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள், இயக்குனர்கள் நடிகர்கள் ஆகியிருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் நடித்து இயக்கியிருக்கிறார்கள். ஆனால், இசையமைப்பாளர்கள் இயக்குனர்கள் ஆன வரலாறு தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு. கரகாட்டக்காரன் படத்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அந்த வரிசையில் இணைகிறார்.
பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து விருந்தாளி, களவாணி, நெல்லு, கலிங்கத்துப் பரணி, ரதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படக் கல்லூரியில் பயின்ற அனுபவத்துடன் இருக்கும் குமரன், தேநீர் விடுதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தேநீர் விடுதி படத்தின் இசையமைப்பாளரும் இவரே. தான் இசையமைக்கும் படங்களுக்கு பிரமாதமான பாடல்களை போட்டுத்தரும் எஸ்.எஸ்.குமரன், தான் இயக்குனராக அறிமுகமாகும் தேநீர் விடுதி படத்தின் பாடல்களுக்காக கூடுதல் கவனம் செலுத்தி இன்னும் இனிமையான, இளமையாஜன பாடல்களை அமைத்திருக்கிறாராம்.
இப்புதிய படம் குறி்த்து குமரன் கூறுகையில், ‌தேநீர் விடுதி நம் எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புடைய ஒன்று. தேநீர் விடுதி செல்லா‌தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுபோல தேநீர் விடுதி படத்தை பார்க்காமல் யாரும் இருக்க முடியாது. அதிகாதலையில் முதன் முதலாக திறக்கிற டை தேநீர் விடுதி. இரவில் கடைசியாக மூடப்படும் கடையும் தேநீர் விடுதிதான். தேநீர் விடுதி என்றாலே ஒரு உற்சாகம் பிறக்கும். அங்கே சுவாரஸ்யங்களுக்கும், நகைச்சுவைக்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது. தேநீர் விடுதி திரைப்படமும் அதைப்போலத்தான். அதனால்தான் படத்திற்கு தேநீர் விடுதி என்று பெயர் வைத்திருக்கிறோம், என்றார்.
படத்தின் நாயகனாக ஆதித், நாயகியாக ரேஷ்மி நடிக்கின்றனர். இவர்கள் இருவருமே இனிது இனிது படத்தில் நாயகன் - நாயகியாக நடித்தவர்கள். இம்மாதம் போடிநாயகக்கனூரில் படப்பிடிப்பு துவங்கி ஒரேகட்டமாக நடக்கவுள்ளது. மணவாளன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை நா.முத்துக்குமார், முருகன் மந்திரம் எழுதுகிறார்கள். பீ காக் பிக்சர்.எஸ்.அனுஷாதேவி இந்த படத்தை தயாரிக்கிறார்.(dinamalar)

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்!

Latest news from Manmathan ambu

Tuesday, November 16, 2010

கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்! தமன்னா கண்டனம்!!

Actress Tamanna condemns Paal abhishegam








கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா, கல்லூரி, கண்டேன் காதலை, பையா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் தமன்னாவுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய தங்கப்பதுமை தமன்னா ரசிகர் மன்றம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த ரசிகர் மன்றம் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தூத்துக்குடியில் பையா படம் ரீலிஸ் ஆன தியேட்டரில் தமன்னாவுக்கு 50 அடி உயர கட்-அவுட் வைத்த ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து அசத்தியுள்ளனர்.

இதுபற்றி கேள்விப்பட்ட தமன்னா, தனது கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், தூத்துக்குடியில் எனது பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி இருப்பது பற்றி என் கவனத்துக்கு இதுவரை வரவில்லை. என் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ததாக கேள்விப்பட்டேன். கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடவுளுக்கு இணையாக இதுபோல் பால் அபிஷேகம் செய்யும் காரியங்களை நான் எப்போதும் ஊக்கப்படுத்த மாட்‌டேன், என்று கூறியுள்ளார்.

ஹீரோ, ஹீரோயின்களின் கட்-அவுட்களுக்கு பால் அபிஷேகம், நடிகைகளுக்கு கோயில் என ரசிகர்கள் தங்களது பாசத்தை காலம் காலமாக காட்டி வந்தாலும் அதனை பெரும்பாலான நட்சத்திரங்கள் கண்டித்ததில்லை. ஆனால், இதுபோன்ற காரியங்கள் தவறு, அதனை நான் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டேன் என்று தமன்னா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையையே காட்டுகிறது.(dinamalar)

ஐஸ்வர்யா ராய்க்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்!

Aishwarya Rai In Trouble For Smoking In Guzaarish Poster‎















நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன், ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் புதிய படம் குஸாரிஷ். வருகிற 19ம்‌தேதி ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். படத்தின் விளம்பர போஸ்டர்களிலும் ஐஸ்வர்யா ராய் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராட்ட களத்தில் குதித்துள்ளன. சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் அந்த அமைப்புகள், இதுபோன்ற காட்சி திரைப்படத்தில் வருவதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளன.
இதுபற்றி நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது. நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன். உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன், என்று கூறியுள்ளார்(dinamalar)

Monday, November 15, 2010

அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள்: ரஜினிகாந்த் ஏற்பாடு




 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள 4 கோபுரங்களுக்கும் ஒளிரும் விளக்குகள் பொருத்த நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார்.
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
2000-ம் ஆண்டில் கிரிவலப் பாதையில் மெர்குரி விளக்குகள் அமைக்க நடிகர் ரஜினிகாந்த் நிதியுதவி செய்தார்.
இதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. தற்போது கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் பொருத்த நடிகர் ரஜினிகாந்த் முன்வந்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன.

நல்லதும் கெட்டதும் கலந்த சினிமா: சுந்தர்.சி





"5 வருஷத்துக்குப் பின் நான் இயக்கும் படம் "நகரம்'. தலைநகரத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லை. நீண்ட நாள் நின்று நிதானித்து பிடித்த கதை. சென்னை நகரம் ஒருவனை எப்படி பிரச்னைகளில் சிக்க வைத்து பந்தாடுதுன்னு சினிமாத் தனம் கலந்து சொல்லப் போகிறேன். சுந்தர். சி படம் எப்படி இருக்குமோ அதில் துளிக் கூட மாற்றம் இருக்காது.'' மென்மையாகப் பேசுகிறார் சுந்தர்.சி. 
வெகு ஜன மக்களின் ரசனைக்கு படம் எடுப்பவர் நீங்கள், இதுவும் அப்படித்தானே?
நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் சினிமா. இதில் வியாபார ரிதீயிலான விஷயங்களை சேர்க்கும் போது அது வெகுஜன மக்களின் ரசனைக்கு போகிறது. "தலைநகரம்' ரிலீசுக்குப் பின் இந்தக் கதை என்னுள் இறங்கி விட்டது. சாவு துரத்தும் வாழ்க்கை வாழும் ஒரு ரவுடியின் கதை "தலைநகரம்'. கொஞ்சம் காதல், நிறைய ஆக்ஷன் துணைக்கு வடிவேலு என நிறைய விஷயங்கள் அதில் இருந்தது. அது போல் இதிலும் சில விஷயங்கள் துணைக்கு இருக்கு. முக்கியமாக வடிவேலு இருக்கார். சென்னை நகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கும் பத்தில் ஒருவனின் வாழ்க்கைதான் இது. நீங்களும் ஒரு வேளை இந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். இனி வாழலாம். ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தான் என்றுதான் இங்கு பாதி கதைகள் முடிக்கப்படுகின்றன. அதுதான் இதில் தொடக்கம். பிரச்னைகளை வேண்டாம் என்று நினைக்கிற ஒருவனை பிரச்னைகள் துரத்தி துரத்தி கொத்தினால் என்னவாகும் என்பதுதான் கதை. அப்போ இதில் நல்லது கெட்டது இருக்கவே செய்யும்.
"அன்பே சிவம்' மாதிரி ஒரு மாற்று சினிமா இருக்குமா?
சினிமா முன்பு மாதிரி இல்லை. "உள்ளத்தை அள்ளித்தா' படம் இப்போது வந்திருந்தால் நான் சினிமாவில் இருந்திருக்க முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. சினிமாவை ரசித்து, நேசித்து சென்னைக்கு வந்தவன் நான். "உள்ளத்தை அள்ளித்தா' படம் வெளியான பத்து நாள் தியேட்டர் காலி. பின்புதான் நல்ல ரிசல்ட். அப்படி ஒரு நிலை இப்போது வந்தால் ஒரே நாளில் பெட்டிக்கு வந்து விடும் படம். எல்லாமே நாளுக்கு நாள் மாறுது. பத்து நாள் கழித்து நிறைய மாற்றம் இருக்கும். தொடர்ச்சியான பணம், புகழ் என எதிலும் கவனமில்லை.  மக்கள் ரசிக்க அவ்வப்போது ஒரு படம் கொடுத்தால் போதும். நாளுக்கு நாள் பேஷன் என சொல்லி இங்கு நிறைய மாற்றம் இருக்கு.  இதில் சினிமாவை மட்டும் எப்படி திட்டம் போட்டு வைத்திருப்பது. லட்சியம், கனவு இதை இனி சினிமாவில் செய்ய நிறைய தைரியம் வேண்டும். இது நான் இயக்கும் 24-வது படம். இதுவே எனக்கு பெருமை. அடுத்து ஒரு படம் ஹீரோவாக நடிக்கலாம் என எண்ணம் இருக்கு. அழகா, அபூர்வமா "அன்பே சிவம்' மாதிரி ஒரு சினிமா இயக்கவும் ஆர்வம் இருக்கு. எது நடந்தாலும் ஆதரிங்க. சுருக்கமாக பேசி முடிக்கிறார் சுந்தர்.சி.    

நித்யானந்தா விவகாரம் : ரஞ்சிதா பரபரப்பு அறிக்கை

Nithyanada issue : Actress Ranjitha statement











சாமியார் நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி 2 மாதங்களை கடந்தும், ரஞ்சிதா தனது தரப்பு விளக்கத்தை தெரிவிக்காமலேயே தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் டில்லியில் தனது வக்கீல் மூலம் நடிகை ரஞ்சிதா ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது கட்சிக்காரருக்கு (ரஞ்சிதா) ஊறு விளைக்கும் வகையில் பல்வேறு இந்திய சட்டங்களையும் மீறி வீடியோ காட்சிகள் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவங்களால் ரஞ்சிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். வீடியோ காட்சிகளில் இருப்பது போன்ற பிரச்சினையில் அதன் நம்பகத்தன்மை, உண்மைத் தன்மை போன்றவை கோர்ட்டில் ஆராயப்பட்டு முடிவு செய்யப்படவேண்டிய விஷயங்கள் ஆகும். வீடியோ காட்சிகளில் இன்னொருவருடன் இருப்பது எனது கட்சிக்காரர்தான் என்று கூறுவதை ஆட்சேபிக்கிறோம்.

சில இணைய தள ஊடகங்கள் வெளியிட்டு வரும் வீடியோ காட்சிகளை வெளியிடக் கூடாது என்று கோரி ரஞ்சிதா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், 2-5-2010-க்கு மேல் இந்த வீடியோ காட்சிகளை இணைய தள ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று இறுதிக்கெடு விடுத்து இருக்கிறோம். ரஞ்சிதாவிடம் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்துவதற்காக அவர் இருக்கும் இடத்துக்கே வர விரும்பியதாகவும், அதற்கு நானே வந்து நேரில் விளக்கம் அளிக்கிறேன் என்று ரஞ்சிதா கூறியதாகவும் வெளியாகி உள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இந்த பிரச்னை குறித்து ரஞ்சிதா இதற்கு மேலும் ஊடகங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக வேதனையடைந்துள்ள அவர் பொதுவாழ்வில் இருந்து விலகி தனது குடும்பத்தினருடன் இனி நேரத்தை கழிக்க விரும்புகிறார். எனினும் தனக்கு பக்கபலமாக இருக்கும் டி.வி.சேனல்களில் அவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடிகை ரஞ்சிதா தற்போது கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் தெக்கத்தி பொண்ணு சீரியலில் நடித்து வந்தார். இது தவிர மணிரத்னத்தின் ராவணா படத்திலும் முக்கிய காட்சியிலும் நடித்து வந்தார். வீடியோ சர்ச்சையால் தெக்கத்தி ‌பொண்ணு சீரியலில் ரஞ்சிதாவை சில நாட்கள் காட்டாமல் இருந்தனர். பின்னர் ரஞ்சிதா இறந்து விட்டது போல காட்சியமைத்து அவரது கேரக்டரை வெட்டி விட்டார்கள். தலைமறைவான ரஞ்சிதாவின் கேரக்டரே ராவணாவில் இருந்து வெட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாயின. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல, சாமியார் நித்தியானந்தா போலீசில் அளித்த வாக்குமூலத்தில், வீடியோவில் இருப்பது ரஞ்சிதாதான். அவருடன் இருப்பது நான் இல்லை... என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பொது வாழ்வில் இருந்து விலகி இருப்பதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரபுதேவா - ரமலத் விவகாரம் : அடுத்தது என்ன?



Prabhu deva - Ramalath issue latest update











பிரபுதேவா - ரமலத் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது (கள்ளக்)காதலி நயன்தாராவுக்காக, காதல் மனைவி ரமலத்தை பிரிந்திருக்கும் பிரபுதேவா, விரைவில் நயன்தாராவை திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து ரமலத் கோர்ட்டுக்கு போனார். காதல் கணவர் பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், நயன்தாராவுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரியும் கோர்ட்டில் மனு செய்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி 2 முறை சம்மன் அனுப்பியும் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஆஜராகவில்லை. வருகிற 23ம்தேதி வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது.
நடிகர் சங்கம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... பிரபுதேவாவும், ரமலத்தும் செய்து கொண்ட திருமணம் பதிவு செய்யப்படாததால், அந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது என்கிற வாதத்துடன் வழக்கை நடத்த பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். ரமலத் தரப்போ... பிரபுதேவாவுடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதற்கான ஆதாரம், குழந்தாகள் பிறப்பு சான்றிதழில் பிரபுதேவாவின் பெயர் இருப்பது, பாஸ்போர்ட் மற்றும் அரசு கெஜட்டில் கணவர் பிரபுதேவா என இருப்பது போன்ற ஆதாரங்களுடன் வழக்கை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் தங்களது வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். 23ம்தேதி நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 வாரத்திற்குள் ரூ.2,500 கோடி செலுத்த வோடோபோனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு



ஹட்ச் எஸ்ஸார் குரூப்பின் இந்திய பிரிவை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு ரூ. 2, 500 கோடி வரிக் கடன் செலுத்துமாறு வோடோபோன் நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ். ஹெச். கபாடியா அடங்கிய பெஞ்ச் வோடோபோன் நிறுவனத்தை ரூ. 8, 500 கோடியை வங்கி உத்தரவாதமாக அரசுக்கு அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வரிக் கடன் ரூ. 2, 500 கோடியை 3 வாரத்திற்குள்ளும், வங்கி உத்தரவாதத்தை 8 வாரத்திற்குள்ளும் செலுத்துமாறு அது மேலும் உத்தரவிட்டுள்ளது.













கனிமொழி நகைச்சுவை பேட்டி!




 ஆ.ராசாவின் ராஜிநாமாவைத் தொடர்ந்து புதிய மத்திய அமைச்சர் யார் என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி முடிவு எடுப்பார் என அக்கட்சி எம்பி கனிமொழி தெரிவித்தார்.

ராசா ராஜிநாமாவைத் தொடர்ந்து கனிமொழி அல்லது டி.ஆர்.பாலு இருவரில் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கனிமொழி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா தவறுசெய்யவில்லை. நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க வேண்டும் என திமுக விரும்பியதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார் என கனிமொழி கூறினார்.
இதனை கனிமொழி எந்த நேரத்தில் கூறினாரோ என்னவோ அவர் கூறி சில மணி நேரங்களிலேயே தொலைதொடர்பு துறை அமைச்சர் பதவி தி.மு.க விற்கு இல்லை என்று காங்கிரஸ் கூறிவிட்டது. "நம்மள இன்னமுமா ஊர்ல நம்புரனுங்க?" என்று வடிவேல் கேற்கும் விதமாக உள்ளது அவருடைய இந்த பேட்டி.

எதைப்பற்றியும் கவலை இல்லை : வீரபாண்டி ஆறுமுகம் பேச்சு

தமிழக அரசு, விவசாயிகளுக்கு 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. வேறு எந்த ஆட்சியிலாவது இதுபோன்ற கடன் தள்ளுபடி செய்தது உண்டா. அதையெல்லாம் நினைப்பதில்லை; அடுத்து என்ன கடன் தள்ளுபடி செய்வர் என எதிர்பார்க்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் கொடுக்கின்றனர் என்றால் ஆர்வமுடன் வருகின்றனரே தவிர, அரசு செய்யும் உதவிகளைப் பற்றி பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவதில்லை.வீரபாண்டி ஆறுமுகம் நல்லதை சொன்னால் போடுவதில்லை. என்ன குறையென்று தேடிப் பிடித்து எழுதுகின்றனர்.

பத்திரிகைகளை கண்டு நான் பயப்பட மாட்டேன். எல்லா பத்திரிகையும் சொல்லவில்லை. ஒரு சில பத்திரிகைகளை மட்டுமே கூறுகிறேன்.என்னிடம் வேண்டாம் அரசியல் விளையாட்டு. உங்கள் பெயரை போட்டால் 1,000 பேப்பர் விற்கிறது என்கிறார். கட்சித் தொண்டர்களும் என்னைப் பற்றி எழுதியுள்ளதை என்னிடமே காட்டுகின்றனர். அவர்கள் பிசினஸ் செய்ய நான் என்ன வியாபாரப் பொருளா?இவ்வாறு அமைச்சர் பேசினார்.  

பார்லி., யில் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

 ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ராஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இந்நிலையில் அவை நடவடிக்கை பாதிக்கப்படுவதால் மத்திய அமைச்சர் ராஜா பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தி.மு.க., தலைமை வலியுறுத்தியது. இதனையடுத்து நேற்று இரவில் ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று பார்லி.,யில் ராஜா விவகாரம் பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை விட்டபாடில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள், மற்றும் அ.தி.மு.க.,வினர் இன்று பார்லி.,யில் வலியுறுத்தினர். பிரதமர் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

இரு முறை ஒத்திவைப்பு : இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் கடும் கூச்சல் நிலவியது. உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளி தொடர்ந்ததால் லோக்சபாவை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.இதற்கிடையில் இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  முதலில் காலை 11 மணிக்கு துவங்கியதும் கூச்சலையடுத்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியதும் மீண்டும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை தேவையில்லை என்கிறார் சிதம்பரம்:இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு அறிக்கை பார்லி., கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சி சார்பில் உறுப்பினர்கள் இருப்பதால் பார்லி., கூட்டு கமிட்டி விசாரணை தேவையில்லை என்றார்.