Monday, December 6, 2010

எம்.ஜி.ஆர்., பாணியில் விஜய்

vijay gives free rice bag to poor people in his kavalan movie trailer











கடந்த வாரம் பொள்ளாச்சி, உடு‌மலைப்பேட்டை பகுதியில் வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் 100 ஏழைகளுக்கு 100 கறவை பசுக்களையும், கன்றுகளையும் இலவசமாக வழங்கினார். அதேபோல்
சென்னையில் தனது காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் மழையால் பாதிக்கப்பட்ட 300 ஏழை குடும்பங்களுக்கு 50கிலோ அரிசி மூட்டைகளை வழங்கினார்.

காவலன் தயாரிப்பாளர் ரோமேஷ் பாபு, இயக்குனர் சித்திக் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், தமிழக வினியோகஸ்தர் ஷக்தி சிதம்பரம் மற்றும் மைக்கேல் ராயப்பன், இயக்குனர்கள் செல்வபாரதி, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ‌பேசிய விஜய் உண்மையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகள், அதுவும் ஏழைகளுக்கு ஒரு மாத காலம் உணவு அளிக்க கூடிய விழா என்பதால்தான் இதுற்கு ஒப்புக்கொண்டேன். 300 ஏழை குடும்பங்களுக்கு தலா ஒரு மூட்டை அரிசு வழங்கும் இந்த விழா ஒரு பெரும் நற்பணி என்பதால், அதனுடன் சேர்த்து காவலன் பட டிரைலரை வெளியிட்டுள்ளோம் என்றவர் அந்த குடும்பங்களுக்ளின் வாழ்த்துக்களுடன் காவலன் பட நிச்சயம் வெற்றி பெறும். லவ், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் அந்தனையும் நிறைந்த ஜனரஞ்சகமான படம் காவலன் என்றார். தொடர்ந்து ஏழை தாய்மார்களுக்கு விஜய், அரிசி மூட்டை வழங்கும் வைபமும் நடந்தேறியது. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மூட்டைகள், ஏழை தாய்மார்களுக்கு கறவை மாடு, கன்றுகுட்டிகள், மாணவர்களுக்கு கம்யூட்டர்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் என எம்.ஜி.ஆர்., ஸ்டைலில் விஜய் இறங்குவது ஏன் என்று தெரியும்தானே?(dinamalar)

No comments:

Post a Comment