
முதல்வர் கருணாநிதியின் உறவினர் அமிர்தத்தின் வாரிசு குணாநிதி அமிர்தம் தயாரித்திருக்கும் புதிய படம் முரட்டுக்காளை. சுந்தர் சி - சினேகா நாயகன் - நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில்
சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குணாநிதி, ஏதோ முதல்வரின் உறவினர் என்பதால் படம் தயாரிக்க வந்துவிடவில்லை. என் தந்தை அமிர்தமும் பிரபல தயாரிப்பாளர், பெரிய ஒளிப்பதிவாளர் என்பதும், அரவிடமும் தலைவர் கருணாநிதியிடமும் தொழில் கற்றுக் கொண்டவன் நான் என்பதாலும்தான் முரட்டுக்காளை மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இது பழைய முரட்டுக்காளை படத்தின் ரீ-மேக்தான் என்றாலும், வித்தியாசமான முறையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் டைரக்டர் செல்வபாரதி. தொடர்ந்து நல்ல பல படங்களை தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறது, என்று முடித்துக் கொண்டார் குணாநிதி(dinamalar)
No comments:
Post a Comment