தமிழ் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர்கள் ஆகியிருக்கிறார்கள், இயக்குனர்கள் நடிகர்கள் ஆகியிருக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் நடித்து இயக்கியிருக்கிறார்கள். ஆனால், இசையமைப்பாளர்கள் இயக்குனர்கள் ஆன வரலாறு தமிழ் சினிமாவில் மிக மிக குறைவு. கரகாட்டக்காரன் படத்தை இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அந்த வரிசையில் இணைகிறார்.
பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து விருந்தாளி, களவாணி, நெல்லு, கலிங்கத்துப் பரணி, ரதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். திரைப்படக் கல்லூரியில் பயின்ற அனுபவத்துடன் இருக்கும் குமரன், தேநீர் விடுதி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தேநீர் விடுதி படத்தின் இசையமைப்பாளரும் இவரே. தான் இசையமைக்கும் படங்களுக்கு பிரமாதமான பாடல்களை போட்டுத்தரும் எஸ்.எஸ்.குமரன், தான் இயக்குனராக அறிமுகமாகும் தேநீர் விடுதி படத்தின் பாடல்களுக்காக கூடுதல் கவனம் செலுத்தி இன்னும் இனிமையான, இளமையாஜன பாடல்களை அமைத்திருக்கிறாராம்.
இப்புதிய படம் குறி்த்து குமரன் கூறுகையில், தேநீர் விடுதி நம் எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புடைய ஒன்று. தேநீர் விடுதி செல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுபோல தேநீர் விடுதி படத்தை பார்க்காமல் யாரும் இருக்க முடியாது. அதிகாதலையில் முதன் முதலாக திறக்கிற டை தேநீர் விடுதி. இரவில் கடைசியாக மூடப்படும் கடையும் தேநீர் விடுதிதான். தேநீர் விடுதி என்றாலே ஒரு உற்சாகம் பிறக்கும். அங்கே சுவாரஸ்யங்களுக்கும், நகைச்சுவைக்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது. தேநீர் விடுதி திரைப்படமும் அதைப்போலத்தான். அதனால்தான் படத்திற்கு தேநீர் விடுதி என்று பெயர் வைத்திருக்கிறோம், என்றார்.
படத்தின் நாயகனாக ஆதித், நாயகியாக ரேஷ்மி நடிக்கின்றனர். இவர்கள் இருவருமே இனிது இனிது படத்தில் நாயகன் - நாயகியாக நடித்தவர்கள். இம்மாதம் போடிநாயகக்கனூரில் படப்பிடிப்பு துவங்கி ஒரேகட்டமாக நடக்கவுள்ளது. மணவாளன் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களை நா.முத்துக்குமார், முருகன் மந்திரம் எழுதுகிறார்கள். பீ காக் பிக்சர்.எஸ்.அனுஷாதேவி இந்த படத்தை தயாரிக்கிறார்.(dinamalar)
No comments:
Post a Comment