நடிகை த்ரிஷாவின் முத்தத்தை பிரபல தெலுங்கு நடிகர் மறுத்துள்ளார். இந்தியில் சக்கைபோடு போட்ட லவ் ஆஜ் கல் படம் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நாயகனாக பவன் கல்யாணும், நாயகியாக த்ரிஷாவும் நடிக்கிறார்கள். இந்தியில் வெளியான இப்படத்தில் முக்கிய காட்சியாக ஒரு லிப் டூ லிப் முத்தக்காட்சி இடம்பெற்றது. இந்த காட்சியை தெலுங்கு ரீ-மேக்கிலும் வைக்க திட்டமிட்டார் டைரக்டர் ஜெயந்த் பரன்ஜி. இதையடுத்து காட்சியின் முக்கியத்துவத்தை த்ரிஷாவிடம் விளக்கினார் அவர். த்ரிஷாவும் முத்தக்காட்சிக்கு ரெடி என பச்சைக் கொடி காட்டினார். ஆனால் பவன் கல்யாண்... முத்தக்காட்சியெல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டாராம். இந்த காட்சி படத்துக்கு ரொம்பவே முக்கியமான காட்சி. லிப் டூ லிப் முத்தக்காட்சியில் நடிக்க த்ரிஷா ஓ.கே. சொல்லி விட்டார். அதனால் தயக்கம் இல்லாமல் நடியுங்கள், என்று டைரக்டர் சொல்லியும், பவன் கல்யாண் மறுத்து விட்டாராம்.
முத்தக்காட்சி என்றால் மூன்று முதல் பத்து தடவை வரை டேக் வாங்கும் ஹீரோக்கள் மத்தியில் முத்தக்காட்சியை வேண்டாம் என்று மறுத்திருகிறார் பவன் கல்யாண். அதுவும் த்ரிஷாவின் முத்தத்தை..! இப்படியும் ஒரு நடிகர்!(dinamalar)

No comments:
Post a Comment