நான் உங்கள் ரத்தம் இல்லை என்றால், யாருடைய மகள், யாருக்கு பிறந்தேன் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று நடிகர் விஜயகுமாரிடம் அவரது மகள் வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னையில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன்; சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றும் அவர் தெரிவித்தார்.
வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி :-
நடந்த சம்பவங்கள் குறித்து, டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தேன். 7ம் தேதி மதுரவாயல் போலீசில் கொடுத்த புகாரின் மீது தற்போது மூவருக்கும், "அரஸ்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த பொய் புகாரின் மீது, எனது கணவரை உடனடியாக கைது செய்தனர். ஆனால், "அரஸ்ட் வாரன்ட் பிறப்பித்த பின்னரும் அவர்களை கைது செய்ய முடியாமல் உள்ளனர். அருண் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும். நான், இதைத் தொடர்ந்து, "பாலோ பண்ணப் போகிறேன்.
என் கணவரை கைது செய்த அன்றிரவு 2.30 மணிக்கு, மூன்று பேர் வந்து, என்னிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கி, தூக்கி எறிந்தனர்; குழந்தையின் கழுத்தை நெரித்தனர். அதற்கு முன், சினிமாவில் தான் அவர்கள் போன்று பார்த்திருக்கிறேன். எனக்கு யாரும் பாதுகாப்புக்கு வரவில்லை. எங்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்; அதன் பின், போனில் மிரட்டினர். அப்போது, "ஹரி, அருணை எதிர்த்தால் காலி பண்ணி விடுவோம் என்று மிரட்டினார். என்னால் சத்தியமாக நம்ப முடியவில்லை. என் வீட்டில் உள்ளவர்கள் அப்படி பண்ணக்கூடியவர்கள் தான்; ஆனால், என்னிடமே ஏன் இப்படி நடந்து கொண்டனர் என்பது தெரியவில்லை.நான் டில்லி வரையில் போக முடியும். நியாயம் கிடைக்க வேண்டும். எனது மகள் ஜோவிகா அமெரிக்காவில் பிறந்தவள்; அவள், அமெரிக்க பிரஜை. இதனால், அமெரிக்க தூதரகத்திற்கும் இ-மெயில் மூலம் புகார் தெரிவித்துள்ளேன். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்த புகார் டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இனி, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; சும்மா விடமாட்டார்கள். மத்திய அரசுக்கு பிரச்னை போகும். எனது பாதுகாப்பிற்கு ஆண்டவன் இருக்கிறான்.
தங்கையின் கணவர் ஹரி தான் ஆட்களை அனுப்பியிருக்கிறார். அவர், தற்போது சினிமா துறையில் தன்னை மிகப்பெரிய ஆளாக நினைக்கிறார். பிரீத்தாவை திருமணம் செய்யும் முன் என்னிடம், "அண்ணி... அண்ணி... நீங்கள் தான் எப்படியாவது முடித்து வைக்க வேண்டும் என்றார். பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஏமாற்றப் பார்த்தார். அந்த ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டிய போது, "இந்த ஆள் உயிருடன் இருக்கவே முடியாது என்றனர். அந்த மாதிரி ஏமாற்றினார். ஹரிக்கும் எனது தங்கை பிரீத்தாவிற்கும் 18 வயது இடைவெளி உள்ளது. திருமணத்திற்கு பின்னர் தான் படம் இயக்கி பெரிய ஆளானார்.என் அப்பா கையை கணவர் உடைத்ததாகக் கூறுவது பொய். அவர் கையில் கட்டுப் போட்டதாக கூறினார்கள்; அதை பிரித்துக் காட்டச் சொல்லுங்கள்.
யாருக்கு பிறந்தேன்? : நான் மிகவும் கேவலமாக நடந்து கொண்டதாகவும், என்னை, அவர் மகளே, அவரது ரத்தமே இல்லை என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், நான் யாருடைய மகள், யாருக்கு பிறந்தேன் என்பதை அவரே சொல்லட்டும். எனது அம்மா பற்றி நிறைய பேச வேண்டும்; ஆனால், என்னால் முடியாது. அவங்களும் சேர்ந்து தானே ஓடிப் போயுள்ளார்கள். எனக்கும் எல்லாம் தெரியும்; நான் அந்த அளவிற்கு இறங்கவில்லை. எனது புகார் தொடர்பாக நியாயம் கிடைக்கவில்லை என்றால் விடமாட்டேன்.
இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என்று அனைவரும் கேட்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கவிதாவின் மகள் (நடிகர் விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள்) திருமணம் நடந்தது. அந்த கல்யாணமே நாடகம். என் அம்மாவின் பெயரை அழைப்பிதழில் போடவில்லை. திருமணத்தில் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதால் பல பெயர்கள் மாற்றப்பட்டன. கவிதாவின் முதல் கணவர், நடிகை வசந்தகுமாரியின் மகன். அவரை, கவிதா விவாகரத்து செய்தார். விவாகரத்திற்காக கோர்ட்டிற்கு சென்றபோது, கவிதா மோசமான நடத்தை உடைவர் என்பதை ஆதாரத்துடன் அவரது கணவர் தரப்பில் நிரூபித்தனர். அப்போது, எனது அப்பாவும், அம்மாவும் கோர்ட்டிற்கு சென்று அவர்கள் காலில் விழுந்தனர். கவிதாவின் கல்யாண பத்திரிகையில், என் அம்மா பெயரை ஏன் போடவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் என்னையும் புறக்கணித்தனர். அப்போது, நானும், எனது தங்கைகள் பிரீத்தா, ஸ்ரீதேவி மூவரும் பேசி, அந்த திருமணத்தைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தோம். அதில் தான் பிரச்னை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து தான் இந்த பிரச்னைகள். அந்த சம்பவத்தில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். நியாயம் கிடைக்கவில்லை என்றால், நான் சும்மா இருக்க மாட்டேன்; எங்கே போக வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
நான் இந்த பிரச்னை குறித்து பெரிய வி.ஐ.பி.,க்கள் மற்றும் எனது அப்பாவின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம் பேசினேன். அவர்கள், "எதுவும் பேசாதே என்று கூறிவிட்டனர். என்னிடம் ஆயுதம் இருக்கிறது; பல பெயர்கள் வெளிவரும். சொத்து பிரச்னை என்று கூறுகின்றனர். சொத்து எனக்கு தேவையில்லை; என்னுடைய சொத்துக்கள் பல அவர்கள் பெயரில் உள்ளன. அவை இனி கிடைக்காது என்பது எனக்கு தெரியும். அவர்களுடன் சமாதானத்திற்கே இடமில்லை. அவர்களை சிறையில் தள்ள வேண்டும் என்றால் போலீஸ் செய்யட்டும். அருண் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்தேன். அவரை ஜெயிலில் தள்ள வேண்டும். அவரது மனைவி ஆர்த்தி, குழந்தைகளுடன் கோர்ட்டிலும், ஜெயில் வாசலிலும் காத்திருந்து அவரை அழைத்துச் செல்வதை நான் பார்க்க வேண்டும்.இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
சமாதானத்திற்கு இடமே இல்லை: நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் கூறியதாவது: என்னை பாத்ரூமில் இருந்து விசாரணைக்காக அழைத்து செல்வதாகக் கூறி இழுத்துச் சென்றனர். இப்படிப்பட்ட நிலையை நான் பார்த்ததே இல்லை. சம்பவத்தன்று நான் குழந்தைகளை கூட்டி வருவதற்காக வனிதாவுடன் சென்ற போது, மாமனார், மாமியார் இருவரும் முழுமையான மது போதையில் இருந்தனர்.மாமனார் விஜயகுமார் என்னை, "பிச்சைக்கார நாயே... உன்னை தமிழ்நாட்டிலேயே இருக்க விடமாட்டேன் என்று ஆவேசமாகக் கத்தினார். ஸ்ரீதேவி திருமணத்தின் போது ஹரி என்னை தொடர்பு கொண்டு, எப்படியாவது திருமணத்தை முடித்து வையுங்கள் என்று கெஞ்சினார். ஆனால், திருமணத்தின்போது அவர் என்னிடம் பேசவே இல்லை. அழிக்க நினைக்கிறார்; சமாதானத்திற்கு இடமே இல்லை.
இவ்வாறு ஆனந்தராஜன் கூறினார்.
கொடுமைக்கார மருமக(ள்): இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறியதாவது:-
ஹரியை போலீசார் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். ஹரி தான் அடியாட்களை அனுப்பினார். அவர், எங்கள் வீட்டின் கொடுமைக்கார மருமக(ள்). பொம்பளைத்தனமாக நடந்து கொள்கிறார்; ஆம்பளை என்றால் தைரியமாக நடக்க வேண்டும்.என் தங்கைகள் இந்த விஷயத்தில் என்னுடன் பேசவே இல்லை. அவர்கள் சொத்துக்காக எதுவும், என்னவும் செய்வார்கள். நான் அப்படி செய்யவில்லை. அதனால் தான் இப்படி நிற்கிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு, அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லையேல், அடுத்த கட்டமாக பல விஷயங்களை வெளியிடுவேன்.
இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.
விசாரணை 30ம் தேதிக்கு தள்ளிவைப்பு : முன்ஜாமீன் கோரி, நடிகை வனிதா விஜயகுமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா. இவர்களின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். முன்ஜாமீன் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வனிதா தாக்கல் செய்த மனு:நானும், என் கணவரும் சேர்ந்து என் தந்தையை தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்புகார் பொய்யானது. என்னை இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்துள்ளனர்.எனக்கும், குடும்பத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. கடந்த 7ம் தேதி எனது சகோதரர் அருண் விஜய், என்னை தாக்கினார். இதனால், என் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மதுரவாயல் போலீசில் புகார் கொடுத்தேன். இதை 22ம் தேதி தான் கோப்புக்கு எடுத்தனர்.என்னையும், என் கணவரையும் பழிவாங்கும் விதத்தில், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி புகார் கொடுத்துள்ளனர். இதனால், என்னை போலீசார் கைது செய்யக்கூடும். எந்த நிபந்தனைகளையும் ஏற்க தயாராக உள்ளேன். என் கணவர் ஆனந்தராஜை, 23ம் தேதி போலீசார் கைது செய்தனர். எனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். வனிதா விஜயகுமார் சார்பில் வக்கீல்கள் நாகேஷ்பாபு, சதீஷ் ராஜன் ஆஜராகினர். மனு மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி அக்பர்அலி தள்ளிவைத்துள்ளார்(dinamalar)
No comments:
Post a Comment