நடிகர் விஜய், நடிகை அசின் நடித்த காவலன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் சிங்கப்பூரை சேர்ந்த தந்தாரா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பொது அதிகாரம் பெற்ற ஜெரோம் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
காவலன் சினிமா படத்தின் வெளிநாட்டில் திரையிடும் உரிமையை அந்த படத்தின் தயாரிப்பாளரான `ஏகவீரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரோகேஷ் பாபுவிடம் ரூ.5.50 கோடிக்கு விலை பேசி 29-9-10 அன்று ஒப்பந்தம் செய்துள்ளோம். இதற்காக ரூ.1.50 கோடி முன்பணம் தரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் படத்தின் அனைத்து உரிமைகளையும் சினிமா பாரடைஸ் உரிமையாளரான சக்தி சிதம்பரத்திடம் விற்றுள்ளனர். இதுபற்றி தெரிந்ததும் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்டேன். முறையான விளக்கம் தரப்படவில்லை. எனவே வெளிநாட்டில் திரையிடும் உரிமையை சம்பந்தப்பட்ட கலர் லேபிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் ஒப்பந்ததை ரத்து செய்துவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் மிரட்டுகின்றனர். எனவே ஒப்பந்தத்தின் மீதி தொகையை நாங்கள் கொடுக்கும் பட்சத்தில் கலர் லேபில் இருந்து வெளிநாட்டில் திரையிடும் பிரிண்டுகளை தர உத்தரவிட வேண்டும். எங்கள் ஒப்பந்தத்தில் வேறுநபர்கள் தலையிட தடை விதிக்க வேண்டும். அதுவரை இந்தப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரித்தார். காவலன் படத்துக்கு 6 வாரத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.(dinamalar)
No comments:
Post a Comment