பிரபுதேவா - ரமலத் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது (கள்ளக்)காதலி நயன்தாராவுக்காக, காதல் மனைவி ரமலத்தை பிரிந்திருக்கும் பிரபுதேவா, விரைவில் நயன்தாராவை திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து ரமலத் கோர்ட்டுக்கு போனார். காதல் கணவர் பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், நயன்தாராவுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரியும் கோர்ட்டில் மனு செய்தார். இந்த வழக்கில் ஆஜராகும்படி 2 முறை சம்மன் அனுப்பியும் நயன்தாராவும், பிரபுதேவாவும் ஆஜராகவில்லை. வருகிற 23ம்தேதி வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற உள்ளது.
நடிகர் சங்கம் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... பிரபுதேவாவும், ரமலத்தும் செய்து கொண்ட திருமணம் பதிவு செய்யப்படாததால், அந்த கல்யாணம் சட்டப்படி செல்லாது என்கிற வாதத்துடன் வழக்கை நடத்த பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். ரமலத் தரப்போ... பிரபுதேவாவுடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதற்கான ஆதாரம், குழந்தாகள் பிறப்பு சான்றிதழில் பிரபுதேவாவின் பெயர் இருப்பது, பாஸ்போர்ட் மற்றும் அரசு கெஜட்டில் கணவர் பிரபுதேவா என இருப்பது போன்ற ஆதாரங்களுடன் வழக்கை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் தங்களது வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். 23ம்தேதி நடைபெறவிருக்கும் வழக்கு விசாரணை கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment