Monday, November 15, 2010

பார்லி., யில் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

 ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மத்திய அமைச்சர் ராஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இந்நிலையில் அவை நடவடிக்கை பாதிக்கப்படுவதால் மத்திய அமைச்சர் ராஜா பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தி.மு.க., தலைமை வலியுறுத்தியது. இதனையடுத்து நேற்று இரவில் ராஜா ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று பார்லி.,யில் ராஜா விவகாரம் பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை விட்டபாடில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ., இடதுசாரிகள், மற்றும் அ.தி.மு.க.,வினர் இன்று பார்லி.,யில் வலியுறுத்தினர். பிரதமர் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் .

இரு முறை ஒத்திவைப்பு : இதனால் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் கடும் கூச்சல் நிலவியது. உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளி தொடர்ந்ததால் லோக்சபாவை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.இதற்கிடையில் இது தொடர்பான பொதுநல வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.  முதலில் காலை 11 மணிக்கு துவங்கியதும் கூச்சலையடுத்து 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கூடியதும் மீண்டும் அமளி நிலவியதால் நாள் முழுவதும் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை தேவையில்லை என்கிறார் சிதம்பரம்:இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தணிக்கை குழு அறிக்கை பார்லி., கணக்கு குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சி சார்பில் உறுப்பினர்கள் இருப்பதால் பார்லி., கூட்டு கமிட்டி விசாரணை தேவையில்லை என்றார். 

No comments:

Post a Comment