நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன், ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் புதிய படம் குஸாரிஷ். வருகிற 19ம்தேதி ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் புகை பிடிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். படத்தின் விளம்பர போஸ்டர்களிலும் ஐஸ்வர்யா ராய் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராட்ட களத்தில் குதித்துள்ளன. சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கும் அந்த அமைப்புகள், இதுபோன்ற காட்சி திரைப்படத்தில் வருவதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளன.
இதுபற்றி நடிகை ஐஸ்வர்யா ராய் அளித்துள்ள பேட்டியில், அந்தக் காட்சியை நான் எடுக்கவில்லை. எனவே அதை நீக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. காட்சி நீக்கப்படுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது. நான் புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெண் அல்ல. படத்திற்காக மட்டுமே அவ்வாறு செய்தேன். உண்மையில் புகை பிடிப்பது என்பது மிகவும் கொடுமையானது. அந்தக் காட்சிக்காக புகை பிடித்தபோது இருமல் வந்து விட்டது. அந்த புகையைக் கண்ட பின்னர், இனிமேல் புகை பிடிப்பவர்கள் பக்கத்தில் கூட போகக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன், என்று கூறியுள்ளார்(dinamalar)
No comments:
Post a Comment