நயன்தாராவிடமிருந்து எனது கணவரை மீட்டு தர வேண்டும் என்று பிரபு தேவா மனைவி ரமலத் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. இந்நிலையில் நயன்தாராவுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும், ‘ஸ்ரீ ராமஜெயம்’ படத்தில் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதனால்
நயன்தாராவுக்கு பதிலாக வேறு நடிகை நடிக்கலாம் என்ற கூறப்பட்டது. ஆனால், தற்போது சீதை வேடத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. டிசம்பர் முதல் வாரம் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. மறைந்த என்.டி.ராமராவ் நடித்த ‘ஸ்ரீ ராமஜெயம்’ படமே மீண்டும் அதே பெயரில் மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் ரீமேக் ஆகிறது.(dinakaran)
No comments:
Post a Comment