Saturday, February 26, 2011

தம்மடிப்பது பெண்களுக்கு நல்லது! - சனாகான் கண்டுபிடிப்பு

பெண்கள் தம்மடித்தால் தப்பில்லை. ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு அடித்தால் உடல் ஸ்லிம்மாகும் என்று சீரியஸாக அட்வைஸ் பண்ணார் நடிகை சனா கான்.

பிரகாஷ் ராஜ் - நாகார்ஜுனா நடித்த பயணம் படத்தின் வெற்றியைப்

பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற படத்தின் நாயகிகளில் ஒருவரான சனா கானிடம், தம்மடிக்கும் பழக்கம் பற்றி கேட்டனர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த சனா, 'பெண்கள் தம்மடிப்பதில் பெரிதாக ஏதும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஓரிரு முறை தம்மடிப்பதால் பெண்களின் சுவாசப் பை நன்கு விரிவடைந்து சுருங்குமாம் (எந்த ஊர் வைத்தியமோ!). பெண்கள் ஸ்லிம்மாகவும் மாறுகிறார்கள். எனவே ஒன்றிரண்டு சிகரெட் பிடிப்பதில் தப்பில்லை," என்றார்.

எப்படியோ... அடுத்த போராட்ட அறிக்கைக்கு வழிசெய்து கொடுத்துவிட்டார் சனா

No comments:

Post a Comment