Sunday, February 20, 2011

'ராணா'வுக்காக இந்தி பேசும் ரஜினி












இந்தியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த குரலில் டப்பிங் பேச சம்மதம் தெரிவித்துள்ளாராம் ரஜினி.

ரஜினி நேரடியாக இந்தியில் கடைசியாக நடித்த படம் புலாந்தி. இது தமிழில் வெளிவந்த 'நாட்டாமை'யின் ரீமேக். இதில் தாம் நடித்த
கெளரவ கதாபாத்திரத்துக்கு தனது சொந்த குரலில் டப்பிங் பேசினார்.

அண்மையில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த சிவாஜி, ரோபோ ஆகிய படங்களில் ரஜினிக்காக வேறொருவர் குரல் கொடுத்தார்.

இந்நிலையில், ரஜினியின் 'ராணா' தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர இருக்கிறது. இதன் இந்தி பதிப்புக்கு தனது சொந்த குரலில் டப்பிங் பேச ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளதாக படக்குழுவில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

படத்தின் நாயகி தீபிகா படுகோன் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், மேலும் இரண்டு நாயகிகளுக்கான பேச்சுவார்த்தை அசின் மற்றும் அனுஷ்கா ஆகியோருடன் நடந்து வருகிறதாம்!

No comments:

Post a Comment