Saturday, February 19, 2011

தமிழில் மட்டுமே கவனம்





தமிழ் படங்களை தவிர்த்து வேறு எந்த மொழிப்படங்களிலும் நடிக்கவில்லை என்றார் பூர்ணா. இது குறித்து அவர் கூறியது:
 ""துரோகி' படத்துக்குப் பின் "ஆடுபுலி' வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். "துரோகி' படத்தில் நல்ல வேடம். படம் சரியாக போகாததால் என் கேரக்டர் வெளியில் பேசப்படவில்லை. "ஆடுபுலி' வித்தியாசமான திரைக்கதை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் தேவையை சொல்லும் படம். புதுமுக இயக்குநர் விஜய் பிரகாஷ். காட்சிகளின் தேவையை உணர்ந்து நடித்ததாகப் பாராட்டினார். "துரோகி' படத்துக்குப் பின் ஆச்சரியமாக என்னிடம் பல நல்ல கதைகள் வந்தன. அவற்றில் தேர்வு செய்ததுதான் இந்த "ஆடுபுலி'. தமிழ் தவிர இப்போது எந்த சினிமாக்களிலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு தமிழ் சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மலையாளத்தில் சில வாய்ப்புகள் வந்த போதிலும் நடிக்கவில்லை. தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது'' என்றார் பூர்ணா

No comments:

Post a Comment