நடிகை கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை என்று நடிகர் மாதவன் மறுத்துள்ளார். 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு இந்தியின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவன், தற்போது தனு வெட்ஸ் மனு என்ற இந்திப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் மாதவன் ஜோடியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி மாதவன் - கங்கானா இருவரும் ரொம்பவே நெருக்கமான காட்சிகளில்
நடித்திருப்பதாகவும், இருவதும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் மும்பை பத்திரிகைகள் படத்துடன் எழுதித் தள்ளி வருகின்றன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மாதவன், தனு வெட்ஸ் மனு படத்தில் நானும் கங்கனாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பதாகவும். லிப் டூ லிப் கிஸ் அடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ எனக்கும் கங்கனாவுக்கும் அப்படி ஒரு காட்சி அந்தப் படத்தில் இல்லை. ஆனாலும் செய்தி வந்துவிட்டது. அதைப் படித்து ரசிப்பதைத் தவிர வேறு வழியில்லை, என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போது தனு வெட்ஸ் மனு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் விளம்பர சுற்றுப் பயணத்தில் இருப்பதாக கூறியிருக்கும் யூனிவவர்செல் நாயகன் மாதவன், படத்தில் நடிப்பது கூட ஈஸி ; ஆனால் விளம்பர பணி இருக்கிறதே.... மகா கஷ்டம், என்றும் கூறியுள்ளார்.(dinamalar)
No comments:
Post a Comment