ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வந்தாளே மகராசி' தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக களமிறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியா, தற்போது பெரியதிரையிலும் கால்பதித்து வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிப்பு துறைக்கு வந்த அனுபவத்தைப் பற்றி அவரிடமே கேட்போமா?
* சினிமாவிலும் டி.வி. தொடரிலும் புதிதாக நடிக்கத் தொடங்கியிருக்கும் அனுபவம் பற்றி?
"வந்தாளே மகராசி'தான் நான் நடிக்கும் முதல் தொடர். அதில் கிராமத்துப் பெண் பவானியாக வருவேன். இந்தத் தொடரின் கதை ரொம்ப வித்தியாசமானது. இப்பொழுது தான் என்னுடைய பகுதி வர ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு நிறைய சவாலான நடிப்பு காத்திருக்கிறது. ஒருவிதத்தில்
நெகட்டீவ் கேரக்டர்னுகூட சொல்லலாம். ஸ்ரீ எனக்கு ஜோடியா நடித்திருக்கிறார். பேசப்படுகிற மாதிரியான கேரக்டராக இருக்கும் என்னுடையது. அந்த டீம்ல எல்லாருமே ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்காங்க. டைரக்டரிடம் இருந்து நடிப்பைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். முதல்முறையாகத் தொடரில் நடிப்பது எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
* சினிமா துறைக்குள் வந்தது எப்படி?
நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படியே மாடலிங்கும், சில ஷோவும் செய்துவந்தேன். அப்பொழுது சசிக்குமார் என் போட்டோவைப் பார்த்துவிட்டு அவருடைய "ஈசன்' படத்தில் நடிக்க கூப்பிட்டார். ஏற்கனவே சசிக்குமார் படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அதனால உடனே ஒத்துக்கிட்டேன். "ஈசன்' படத்தில் நாயகியின் தோழியாக நடித்திருப்பேன். அதன்பிறகு தான் ஜெயா டிவியில் இருந்து நடிக்க கூப்பிட்டார்கள். அப்படித்தான் சினிமாதுறைக்குள் எண்ட்ரி கொடுத்திருக்கிறேன்.
* வேறு தொடர்களில் நடிக்கிறீங்களா?
தற்போதைக்கு தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை. ஆனால் பெரியதிரையில் இரண்டு படங்கள் கமிட் ஆகியிருக்கேன். படத்துக்குப் பேரு இன்னும் வைக்கவில்லை.
* என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் நடிக்க விருப்பப்படுகிறீர்கள்?
நான் இப்பொழுதுதான் புதுசா சினிமாத் துறைக்குள் வந்திருக்கிறேன். நடிப்பு எனக்கு புதுசு. அதனால இந்தக் கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரம்னு எனக்கு சொல்லத் தெரியலை. இருந்தாலும் எல்லா விதமான கேரக்டர்களும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக நெகட்டீவ் கேரக்டராக இருந்தாலும் கண்டிப்பாக நடிப்பேன்.
* மாடலிங் செய்வதற்கும் தற்போது நடிகையாகி இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
மாடலிங், நடிப்பு ரெண்டுமே வேற வேற துறை. மாடலிங் பொருத்தவரை கஷ்டம்னு சொல்வது போன்று எதுவும் கிடையாது. ஆனால் நடிப்பு அப்படியில்லை. நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆரம்பத்தில் கேமிரா முன் நிற்பதற்கே எனக்கு ரொம்பப் பயமாக இருக்கும். எப்படி எங்க நிற்கணும், என்ன செய்யணும்னு எதுவுமே தெரியாது.
ஏதாவது தப்பா செய்துவிட்டால் யாராவது திட்டிவிடுவார்களோன்னு பயம் இருந்தது. ஆனால் எல்லாருமே ரொம்ப ப்ரண்ட்லியா இருந்தாங்க. நிறைய சொல்லிக்கொடுத்தாங்க. ஓரளவுக்கு இப்போ அனுபவம் வந்துவிட்டது. இன்னொரு விஷயம் பார்த்தீங்கனா நடிப்பு துறைக்கு வந்த பிறகு எங்கு வெளியே போனாலும் மக்கள் அடையாளம் தெரிந்து கொண்டு வந்து பேசுகிறார்கள். அது எனக்கு புது அனுபவமா இருந்தது. ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.
குடும்பம் குறித்து?
நான் பிறந்தது, வளர்ந்தெல்லாம் சென்னையில்தான். பி.எஸ்ஸி. சைக்காலாஜி படித்திருக்கிறேன். அப்பா சந்தானம், அம்மா ஷீலா, அக்கா, தங்கை, பாட்டி இருக்காங்க. இது தான் எங்கள் குடும்பம்.
உங்கள் பொழுது போக்கு என்ன?
சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பு அடிக்கடி ஷாப்பிங் போவேன், பிரண்ட்úஸôட ஜாலியா அரட்டை அடிப்பேன். ஆனால் இப்பொழுதெல்லாம் ஷாப்பிங் போவதற்குகூட நேரம் கிடைப்பதில்லை. மாற்றி மாற்றி ஷூட்டிங் போவதற்கே நேரம் சரியா இருக்கிறது, அப்படியே நேரம் கிடைத்தாலும் நல்லா தூங்குறேன்.

No comments:
Post a Comment