"பெண்ணினத்தை இழிவுபடுத்தியும், தன் பெயரை களங்கப்படுத்திய, லெனின் கருப்பன் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ராம்நகர் கோர்ட்டில் நடிகை ரஞ்சிதா,
நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.
சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை, சாமியாரிடம் டிரைவராக இருந்த லெனின் கருப்பன் வெளியிட்டார். இதைத் தொடந்து, சாமியார் நித்யானந்தா விவகாரம் விஸ்வரூபமடைந்தது. கடந்த டிச., 30ம் தேதி, ராம்நகர் கோர்ட்டில், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய லெனின் கருப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகை ரஞ்சிதா, நேரில் ஆஜராகி மனு கொடுத்தார்.
இந்த மனு, நீதிபதி ரூபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. காலை, 10.30 மணிக்கு, கோர்ட்டுக்கு ரஞ்சிதா, அவரது வக்கீல்களுடன் வந்தார். பகல், 2.30 மணி வரை கோர்ட்டில் இருந்தார். நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ரஞ்சிதா தரப்பில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. லெனின் கருப்பன், பொய்யான தகவல் கொடுத்துள்ளார். எனக்கும், அந்த வீடியோ காட்சிக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரை களங்கப்படுத்துவதற்காக ஜோடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டால், என் மனம் மிகவும் புண்பட்டு விட்டது. பெண்ணினத்தை இழிவுபடுத்தி விட்டனர். இதற்கு காரணமான நித்யானந்தாவின், முன்னாள் டிரைவர் லெனின் கருப்பன், அவரது வக்கீல் ஸ்ரீதர், ஆர்த்திராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கை, பிப்., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ராம்நகர் கோர்ட்டில், இரண்டாவது முறையாக ரஞ்சிதா ஆஜரானார். கழுத்தில் ஜெபமாலை அணிந்திருந்தார். நீதிபதி வருவதற்கு முன்னரே, கோர்ட் அறைக்குள் வந்து விட்டார்.

No comments:
Post a Comment