Sunday, January 23, 2011

நடிகைகள் ‌தொழில் தொடங்க அவசரப்படக் கூடாது ; நடிக்கும்போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று நடிகைகளுக்கு நடிகை ராதா அட்வைஸ் செய்துள்ளார். 80 - 90களில் முன்னணி நடிகர்களாக
இருந்த அனைவருடனும் ஜோடி போட்ட பெருமைக்குரியவர் நடிகை ராதா. 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், ஒரு காலகட்டத்தில் திருமணமாகி மும்பையில் செட்டிலாகி விட்டார். ராதாவின் மகள் கார்த்திகா. தெலுங்கில் ஜோஷ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கார்த்திகா, இப்‌போது தமிழில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ராதா பின்னர் திருப்பதி கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனத்துக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறுகையில், நான் மும்பையில் வசிக்கிறேன். எனது கணவர் அங்கு ஓட்டல் பிஸினஸில் ஈடுபட்டுள்ளார். எனக்கு இரு மகன்கள், ஒரு மகள். மகள் கார்த்திகா என்னைப்போல் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறாள். என்னைப்போல் எனது மகளும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நான் நடிக்கும்போது  எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது என் மகள் வயதுள்ளவர்கள் எனது நடிப்பை புகழ்ந்து பேசுவதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.

இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகைகளுக்கு என்ன அட்வைஸ் கூறுவீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராதா,  புதிய நடிகைகளுக்கு அட்வைஸ் என்று எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரம் ஒரு படத்திலேயே தங்களை திறமைசாலிகள் போல் காட்டிக் கொள்ளும் நடிகைகளுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். இந்த குணம் சினிமாவில் உதவாது. புதிய நடிகைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டாமல் இருப்பது இங்கு முக்கியம். பத்து படங்களில் நடித்தும் கூட நான் பயத்துடன்தான் இருந்தேன். நடிக்கும் போதே குடும்ப வாழ்க்கை குறித்து தெளிவாக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். தொழில் தொடங்க அவசரம் வேண்டாம். நன்றாக செட்டிலாவது முக்கியம், என்று கூறினார்.

No comments:

Post a Comment