சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,
அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நீங்களும் அரசியலில் இறங்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அஜித், எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன். காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால்... எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம். அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்

No comments:
Post a Comment