Thursday, January 27, 2011

தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பில்லை!


தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது என்று நடிகை ரதி ஆதங்கப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த இவர், பல் மருத்துவத்தில் படித்து கொண்டிருக்கும் போதே,
திரை உலகில் நுழைந்தார். படங்கள் ஒன்றும் சரியாக வராததினால், மீண்டும் சொந்த ஊர் திரும்பி படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். படிப்பு முடிவடையும் நிலையில் சீரியல்களில் தலைகாட்ட தொடங்கியுள்ளார். ஜெயா டி.வி.யில் வெளியாகி வரும், பாலச்சந்தரின் இயக்கத்தில் சாந்தி நிலையம் சீரியலில் இவர் நடித்து கொண்டிருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பிலே பாரதியின் கவிதை, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். சொல்லடி சிவசக்தி என்று பேசி, கே.பி.யிடம் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார். கன்னடத்தில் இவர் சீரியல் பங்காரம் 150 எபிசோடை தாண்டி பெரும் பாராட்டை பெற்று வருகிறதாம்.
ரதியிடம், மீண்டும் ஏன் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் இல்லையா என்று கேட்டால், தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. நல்ல கதைகள் தருவதில்‌லை என்று ஆதங்கப்படுகிறார். சீரியலில் வந்தபிறகு ஏகப்பட்ட கேரக்டர் ரோலில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம், அத்தனையும் தவிர்த்து ஓடிக்கொண்டு இருக்கிறாராம்(dinamalar)

No comments:

Post a Comment