Monday, July 23, 2012

மனைவிக்கு அதில் ஆர்வமில்லையா? சீக்கிரம் கவனிங்க!

வேலைப்பளு, மனஅழுத்தம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களினால் 30 சதவிகித பெண்கள் செக்ஸில் ஆர்வமில்லாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் மெனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்சில் ஆர்வம் குறையும். ஆனால் சாதாரணமாகவே தற்போது தாம்பத்ய வாழ்க்கையில் பெண்களுக்கு ஆர்வம் குறைந்து
வருவதாக அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது, அது தரும் சந்தோஷத்தை உணர முடியாதவர்கள்- செக்ஸ் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபட முடியாதவர்கள் `ஹைப்போ ஆக்டிவ் செக்சுவல் டிசார்டர்' என்ற பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள். `செக்சுவல் அவர்ஷன் டிசார்டர்' என்ற பாதிப்பு கொண்டவர்கள், செக்ஸினை வெறுப்பார்கள். கணவரை அருகில் கூட நெருங்கக்கூட விட மாட்டார்கள்.
செக்ஸ் மீது வெறுப்பு
பெண்களுக்கு செக்ஸ் எண்ணங்கள் இருந்தால்தான் அவர்களுக்குள் தொடக்க நிலை கிளர்ச்சியை உருவாக்கும். பின்பு அடுத்த கட்டத்தை நோக்கி ஆர்வம் தூண்டப்படும். அப்போது அவர்கள் உடல் முழுக்க அதற்கான ஏக்கம் பரவும். இதுதான் இயற்கை. இதற்கு மாறாக செக்ஸ் பற்றிய சிந்தனை- கிளர்ச்சி- உணர்ச்சி எதுவுமே இல்லாமல் மரத்துப்போகும் நிலை கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இந்த பாதிப்பிற்கு ஆங்கிலத்தில், `பிரஜிடிட்டி' என்று பெயர். இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறார்கள்.
கணவர் எவ்வளவு ஆர்வமூட்டினாலும் உணர்ச்சியே உருவாகாத பெண்கள், உச்சக்கட்டம் அடையாதவர்கள், மேலோட்டமான செக்ஸ் செயல்பாடுகளில் கூட விருப்பமற்றவர்கள், உடலில் பெண்மைக்குரிய அனைத்தும் இருப்பினும் செக்ஸ் மீது தீராத வெறுப்பு கொண்டவர்கள், உறுப்பு பகுதியில் ஈரப்பதம் இல்லாதவர்கள், செக்ஸ் தொடர்பு பற்றி எதுவுமே தெரியாதவர்கள் ஆகியோர் `பிரஜிடிட்டி' பாதிப்பு கொண்டவர்களாக கருதப்படுவார்கள். செக்ஸ் பற்றி எதிர்மறையான எண்ணம் கொண்டிருப்பது, அதை பாவச் செயல் என்று கருதுவது போன்றவைகளும் பெண்களின் செக்ஸ் ஈடுபாட்டை இல்லாமல் ஆக்கி விடும். அதேபோல் உடல்- மனச் சிக்கல் கொண்ட பெண்களுக்கும் செக்ஸ் விருப்பம் குறையும்.
நோய்களால் பாதிப்பு
மன அழுத்தம், கவலை, பயம், தொழிலில்- வேலையில் ஏற்படும் பிரச்சினை, பணச்சிக்கல், கணவர் மீது சந்தேகம் கொள்ளுதல் போன்றவைகளும் பெண்களின் செக்ஸ் ஆசையை குறைத்து விடும். மன அழுத்தத்தை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் மருந்து சாப்பிடுகிறவர்கள்- கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள்- இன்னும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு அந்த மருந்துகளின் செயல்பாட்டால் செக்ஸ் விருப்பமின்மை தோன்றும்.
மது அருந்தும் பெண்களுக்கும் காலப்போக்கில் செக்ஸ் ஈடுபாடு குறையும். செக்ஸ் ஆர்வமின்மை, உறவில் ஈடுபடும்போது வலி, உறுப்பு பகுதியில் திரவத்தன்மை குறைவு, மனோபாஸ் காலக்கட்டத்தில் ஏற்படும் செக்ஸ் விரக்தி போன்ற அனைத்திற்கும் சிகிச்சைகள் உள்ளன. அதன் மூலம் செக்ஸ் ஆர்வத்தை சீரமைக்க முடியும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு நோய்கள் போன்றவைகளை பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிகிச்சைகள் பெற்றால் இயல்பாகவே செக்ஸ் ஆர்வமும் அதிகரிக்கும். அதுபோல் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் பெண்களும் செக்சில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மனம் விட்டு பேசலாம்
தாம்பத்ய உறவின் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது மனம்தான். கணவரும்- மனைவியும் பரஸ்பரம் மனம் நிறைய அன்பு செலுத்தும்போது அதுவே உடல் பூர்வமான முழுமையான உறவுக்கு தூண்டுகிறது. எனவே தம்பதியர் மனம் ஒத்து அன்பு செலுத்தவேண்டும். படுக்கை அறையில் மட்டும்தான் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில்லை. இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். பொழுது போக்கவேண்டும். தினமும் வேறு ஏதாவது ஒரு இடத்தில் தனிமையில் அமர்ந்து பேச வேண்டும். அப்போது அவர்களுக்குள் உணர்வுகளை பங்கிட்டு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பேசி, நெருக்கமாய் அவர்கள் படுக்கை அறைக்கு சென்றால் உடல்களின் சங்கமம் உற்சாகமாய் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.(thanks thatstamil)

No comments:

Post a Comment