Thursday, July 26, 2012

காரசார மிளகாய் கொழுப்பை கரைக்கும்!


உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய்
என பல பொருட்களை கலந்துதான் சமையல் செய்யப்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளையும் சமையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பல பொருட்களை சமையலில் பயன்படுத்திவருகின்றனர் முன்னோர்கள்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான நன்மைகளை ஏற்படுத்துகின்றன. காரத்திற்காக பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றல் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து சிக் என்று ஆக்கிவிடுகிறதாம்.
லண்டனைச் சேர்ந்த உணவு விஞ்ஞானி ஸ்டீபன் ஒயிட்டிஸ் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மிளகாய் வத்தலில் கேப்சைசின் என்ற ரசாயன படிமம் உள்ளது. அது கடினமான வெப்பத்தை தரக்கூடியது. அதனால் கொழுப்பை உருவாக்கும் செல்கள் எரிக்கப்படுகின்றன.
இதனால் வயிற்றுப் பகுதியில் படிந்திருக்கும் கொழுப்பு படிவங்கள் அழிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. எனவே உணவில் அதிக அளவில் மிளகாய் வத்தல் அதாவது காரம் சேர்த்து கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொழுப்பு சத்து அதிகரிப்பால் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவை வராமல் தடுக்க கொழுப்பு செல்களை அழிக்கவும் மிளகாய் வத்தலை அதிகம் பயன்படுத்துவது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். ஆண்களும் பெண்களுமாய் 34 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 28 நாட்கள் நடைபெற்ற ஆய்வின் முடிவில் மிளகாய் வற்றலுக்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று தெரியவந்துள்ளது.(THANKS ONEINDIA.COM)

No comments:

Post a Comment