படியளக்கும் பெருமாள், கனவில் வந்து காலணி கேட்கும் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் இந்தப் பகுதியில் பக்தர்கள் எளிதாக நடமாட இயலா தபடி மணற் குவியலும் கற்களுமாக நிரம்பியிருந்தன. தெளிவாகச் சொல்வதானால் இந்தப் பகுதிக்கு வரும் வழியே அடைபட்டுக் கிடந்திருக்கிறது. இதைச் சீர் செய்து, கோயிலின் எல்லாப் பகுதிகளையும் எல்லா பக்தர்களும் சுலபமாக அடையும் வகையில் தடைகளைத் தகர்த்து, நேர்வழி அமைத் துக் கொடுத்திருக்கிறார், இந்த நூற்றாண்டு ராமானுஜர்! ஆமாம், இணை ஆணையராகப் பொறுப்பு மேற்கொண்டு சமீபத்தில் ஓய்வும் பெற்றுவிட்ட ஜானகிராமன்தான் அவர். காலையில் கோயிலுக்குள் நுழைந்தது முதல், இரவு கவியும் நேரம்வரை கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தியிருக்கிறார் இவர்.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பகுதி, சந்திர புஷ்கரணி. இந்தக் குளத்தை முறையாக தூர் வாரி, நீர் ஆதாரத்தை வளப்படுத்தியிருக்கிறார். பக்தர்கள் யாரும் உள்ளே வரமுடியாதபடி நிறுத்தப்பட்டிருந்த தடைக் கதவைப் பெயர்த்து குளத்தின் படிக்கட்டுகளுக்கருகே பொருத்தியிருக்கிறார். இதனால்பக்தர்கள் உள்ளே நுழைந்து புஷ்கரணியை தரிசிப்பதோடு, வடமேற்குப் பகுதியிலிருக்கும் ராதா கிருஷ்ணன் சந்நதிக்கும் வந்து பக்தி செலுத்துகிறார்கள். ரங்கநாதரைத் தம் பாதுகாப்பில் சில ஆண்டுகள் வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானுக்குத் தம் நன்றியை வருடா வருடம், ஸ்ரீரங்கம் கோயில் நிறை வேற்றி வருகிறது. அதாவது திருப்பதி பிரம்மோற்சவ விழா சமயத்தில் ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக ஒரு வஸ்திரம், வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த வஸ்திரத்தை திருச்சியிலுள்ள ஒரு ஜவுளி நிறுவனம், தம் செலவில் தயாரித்துத் தர, அதை கோயில் நிர்வாகத்தினர் பெற்று, 50 பேர் கொண்ட ஒரு குழு இந்த வஸ்திரத்தை எடுத்துச் செல்லும். இந்தக் குழுவில் ஜவுளி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், ஊர்ப் பிரமுகர்களும், கோயில் சம்பந்தப்பட்ட ஓரிருவரும் இருப்பார்கள். திரு. ஜெயராமன், ஒருமுறை இந்த சம்பிரதாயத்தில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார். அதாவது கோயில் பணத்திலிருந்தே அந்த வஸ்திரத்தை வாங்கினார். அதை எடுத்துச் செல்லும் குழுவில், கோயிலின் மூத்தப் பணியாளர்கள், பணி ஓய்வுபெற இருப்பவர்கள், அதுவரை திருப்பதிக்கே சென்றிராத கோயில் சம்பந்தப்பட்டவர்களை இடம்பெறச் செய்தார்.
ஏழுமலையான் தரிசனத்தை அடுத்தடுத்து குறிப்பிட்ட குழுவினரே பெறுவதைவிட, கோயிலுக்காக நற்பணியாற்றியவர்களை அனுப்பி வைப்பதுதான் சரி என்ற தன் எண்ணத்தைச் செயலாற்றினார். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம், அந்தக் குழுவில் அவர் இடம்பெற விரும்பவில்லை என்பதுதான்! ‘‘என் இடத்தில் வேறு யாராவது போகட்டும். நான் இந்த அரங்கனுக்கு சேவை செய்வதிலேயே திருப்பதி பெருமாள் தரிசனமும் பெற்றுவிடுவேன்’’ என்று குறிப்பிட்டார், அவர். ஆனாலும் அவரு டைய சேவையை கௌரவிக்கும் வகையில், அவரை நிர்ப்பந்தப்படுத்தி அந்தக் குழுவினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இவரை இந்த நூற்றாண்டின் ஸ்ரீரங்கத்து ராமானுஜர் என்று பாராட்டுவதில் தவறு ஏதேனும் உண்டா? ‘‘இல்லை’’ என்று மேட்டழகிய சிங்கரே சொல் வது போலத்தான் தோன்றுகிறது. தாயார் சந்நதிக்குப் போகும் வழியில் ஐந்து குழி-மூன்று வாசல் என்று ஒரு பகுதி இருக்கிறது. இந்தப் பகுதியை வெளியிலிருந்து அடைய மூன்று வாசல்கள் இருப்பதால் மூன்று வாசல் சரி, அது என்ன ஐந்து குழி? இதற்கு ரசனைமிக்க ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது. திருவரங்கன், உறையூர் தலத்துக்குச் சென்று அங்கே கமலவல்லி நாச்சியாரைக் கடிம ணம் புரிந்து கொண்டார். ஸ்ரீரங்க நாச்சியார், இங்கே ஸ்ரீரங்கத்தில் தன் இடக்கை விரல்களைத் தரையில் ஊன்றி, அவர் வருகைக்காகக் காத்திருந்தார்.
தரையில் குழிகளே விழுமளவுக்கு மிகுந்த கோபத்துடன் தாயார் காத்திருந்திருக்கிறார்! மூன்று நாட்கள் கழித்து, அரங்கன் திரும்ப வந்தபோது, ஸ்ரீரங்க நாச்சியார் பிணக்கு கொண்டு, தன்னைப் பார்க்க அவர் வரலாகாது என்று திருக்கதவை சாத்தினாள். பிறகு நம்மாழ்வார் வந்து இருவருக்குமிடையே யான பிணக்கைத் தீர்த்து வைத்து இருவரையும் ஒன்றிணைத்து வைத்தார். இந்த சம்பவத்தை இன்றும் பங்குனி மாத திருவிழாவில் நடத்திக் காட்டுகிறார்கள். உற்சவத்தின் 6வது நாளன்று ரங்கன் உறையூர் செல்வதாகவும் 9ம் நாள் திரும்புவதாகவும் காட்சிகள் அமையும். பிணக்கு கொண்ட தாயார் சார்பில் வாதாடுபவர்கள் ஐந்தாவது திருச்சுற்றில் உள்ள பிரதான வாயிலை அடைத்துவிடுவார்கள்.
அரையர்கள் (நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை பாடியும், நடனமாக ஆடியும், திருமால் பெருமையை விளக்குபவர்கள்) ரங் கனுக்கும் தாயாருக்கும் இடையே தூது செல்வார்கள். தாயார் பிரதிநிதிகள் பெருமாள் மீது பூ, பழங்களை விட்டெறிவார்கள். (தாயார், ரங்கன் மீது கோபமாக இருக்கிறாராம்!). பிறகு நம்மாழ்வாராக வேடம் தரித்தவர் வந்து இருவரும் சமரசமாகிவிட்டதாகத் தெரிவிப்பார். உடனே பெருமாளும் பிராட் டியும் ஒன்றாக தரிசனம் தருவார்கள்; அடுத்த நாள் இருவரும் ஒரே ரதத்தில் திருவீதி உலா வருவார்கள். ஸ்ரீரங்க நாச்சியாரின் சந்நதியும் மிகப் பெரியது. அன்னை பேரழகோடும் பெருந்தன்மையோடும் திகழ்கிறார். நாச்சியாருக்கு இரண்டு விக்ரகங்கள் உள் ளன. முகமது-பின்-துக்ளக் படையெடுப்பால் விளைந்த பயன்தான் இது!
முகலாயர்கள் ஸ்ரீரங்கக் கோயிலைக் கொள்ளையடிக்க முற்பட்டபோது, மூலவர் சந்நதியை சுவர் எழுப்பி மறைத்தார்கள்; கூடவே உற்சவர் விக்ரகத்தை அங்கிருந்து எடுத்துப் போய் திருப்பதி பெருமாளின் பராமரிப்பில் ஒளித்துப் பாதுகாத்தார்கள். அப்போது நாச்சியார் உற்சவர் விக்ரகத்தை கோயிலிலிருந்த வில்வ மரத்தடியில் மறைவாகப் புதைத்து வைத்தார்கள். 1371ம் ஆண்டு, விஜயநகர மன்னர் இப்பகுதியை வென்ற பிறகே ஸ்ரீரங்கத்துக்குப் பரிபூரண விடுதலை கிடைத்தது. அப்போது, தாம் மரத்தடியில் மறைத்து வைத்திருந்த தாயார் சிலையைத் தேடித் தோண்டினார்கள். ஆனால், சிலை கிடைக்கவில்லை. உடனே, மாற்றாக இன்னொரு விக்ரகம் தயாரித்து ஸ்தாபிதம் செய் தார்கள்.
பிறகு, 48 வருடங்களாக திருப்பதி பெருமாள் பாதுகாத்து வைத்திருந்த ரங்கநாதரை மீண்டும் அழைத்து வந்து பிரதிஷ்டை செய்தார்கள். அப் போது யாரும் எதிர்பாராத வகையில், அந்த வில்வ மரத்தடியிலிருந்து தாயார் தானே வெளிப்பட்டார். இவரையும் மறுபடி பிரதிஷ்டை செய்தார்கள். இந்த வகையில் இங்கே இரு ஸ்ரீரங்க நாச்சியார்கள்! பக்திக் காதல் என்று சொன்னால் அதற்கு, ஸ்ரீரங்கனுக்கு தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட சில பெண்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் களில் முக்கியமானவள் ஆண்டாள். பெரியாழ்வார் எடுத்து வளர்த்த கோதை.
அடுத்து, குலசேகர ஆழ்வாரின் மகளான குலசேகர நாச்சியார், ஆண் டாள் பாணியிலேயே அரங்கனை அடைந்தவள். இதற்கு முன்னே குறிப்பிட்ட துலுக்க நாச்சியார், அரங்கனை காவிரி, கொள்ளிடம் என்ற இரு கரங்கள £ல் அரவணைத்துக் கொண்டிருக்கும் நதி, இவர்களோடு அரங்கனுக்காக ஒரு கொலை புரிந்து, தற்கொலையும் செய்துகொண்ட ‘எம்பெருமானடியார்’ என்று சிறப்பிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் கோயில் ஆடற்மகள் ஒருத்தியைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment