Sunday, December 19, 2010

நன்றியை மறந்த தமன்னா

நன்றிக்கும், சினிமாவுக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டைரக்டர் லிங்குசாமிக்கு அப்படியொரு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தமன்னா.

"பையா" படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரத் தொடங்கியவர் தமன்னா. இப்படத்தை டைரக்டர் லிங்குசாமி இயக்கி இருந்தார். முதலில் இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. படத்தில் அவருக்கு ரூ. 1 கோடி சம்பளம் தருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் வரிசையாக நயன்தாராவின் படங்கள் சரியாக ஓடாததால் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார் லிங்குசாமி. ஆனால் அதை நயன்தாரா ஏற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இறுதியில் நயன்தாரா நீக்கப்பட்டார். பிறகு தமன்னாவை நடிக்க வைத்தார். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்போது பிரச்சனை என்னவென்றால் லிங்குசாமி தான் அடுத்து இயக்கும் "வேட்டை" படத்தில் தமன்னாவை நடிக்க ‌வைக்க திட்டமிட்டுருந்தார். இதற்காக தமன்னாவிடம் அணுகினார். ஆனால் தமன்னா கேட்ட சம்பளத் தொகையை கேட்டு அதிர்ந்து போனார் லிங்குசாமி. தமன்னா கேட்ட அவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியாததால், அமலா பாலை "வேட்டை" படத்தின் நாயகியாக்கியுள்ளார்.

"பையா" படத்தில் தமன்னாவை நடிக்க வைத்ததால், தன்னுடைய "வேட்டை" படத்தில் சம்பளத்தை குறைத்து நடித்து தருவார் என்று எதிர்பார்த்திருந்தார் லிங்குசாமி. ஆனால் அவருக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் தான் மிஞ்சியது.

சினிமாவில் (வாழ்க்கையில்) ஏற்றம் தந்தவர்களை கண்டு கொள்ளாமல் போவது, தமிழ் சினிமாவில் சகஜம்தான் என்பது, தமன்னா விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

Friday, December 17, 2010

சமிரா ரெட்டி புகைப்படங்கள்


விலைமாதுவாக நடிக்கப்போகிறார் சமீரா

நடிகை சமீரா ரெட்டி புதிய படமொன்றில் விலைமாதுவாக நடிக்கப் போகிறார். வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி ஏராளமான தமிழ் ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த சமீராவை தமிழில் அறிமுகப்படுத்திய டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது மீண்டும் ஒரு படத்தில் சமீராவை நாயகியாக்கி இருக்கிறார். சமீபத்தில் வெளியான அசல் படத்தில் சமீராவின் கேரக்டர் பேசும்படி அமையாவிட்டாலும், ரசிகர்கள் சமீராவின் அடுத்த படம் எப்போது? என்று எதிர்பார்த்து வருகிறார்கள். கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படம் மர்மம் கலந்த திகில் படமாம். இப்படத்தில் சமீராதான் நாயகி. விலைமாதுவாக நடிக்கப் போகிறார். நாயகனாக நடிக‌ை மகேஸ்வரியின் சகோதரர் நடிக்கவுள்ளார். பொதுவாக முன்னணி நாயகிகள் எவரும் விலைமாதுவாக நடிக்க தயங்கி வரும் நிலையில் சமீரா அந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் கவுதம் கேட்டுக் கொண்டதால் ஓ.கே. சொல்லியிருப்பாரோ என்னவோ?

அஜீத்தின் மங்காத்தாவுக்கு ரெட் சிக்னல்!

டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நாயகனாக நடிக்கும் மங்காத்தா படத்திற்கு அதன் தயாரிப்பாளர் ரெட் சிக்னல் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ‌மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம் மங்காத்தா டீம். பாங்காக்கில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு வந்த மங்காத்தா குழுவினர், படத்தின் தயாரிப்பாளரிடம் செலவு கணக்குகளை கொடுத்திருக்கிறார்கள். பில்லை பார்த்த தயாரிப்பு தரப்புக்கு பல்ஸ் ஏறிடவே... நான் சொன்னதுக்கு அப்புறம் ‌நெக்ஸ்ட் ஷெட்யூல் போனா போதும்னு சொல்லி விட்டார்களாம்.
அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க சில வாரங்கள் ஆகலாம் என நினைத்த டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட யூத் யூனிட், அடுத்தகட்ட பணிகளை செய்து வந்தனர். அதாகப்பட்டது... இதுவரை படமாக்கிய காட்சிகளுக்கு தேவையான எடிட்டிங், எக்ஸ்ட்ரா பிட்டிங் பணி‌களை செய்து வந்தார். எத்தனை நாட்களுக்குத்தான் அதையே பார்த்துக் கொண்டிருப்பது, என நினைத்த அந்த குழு, மீண்டும் தயாரிப்பாளரை அணுகி நெக்ஸ்ட் ஷெட்யூல் பற்றி கேட்க, முதலில் சொன்ன பதில்தான் மீண்டும் வந்திருக்கிறது. மங்காத்தாவுக்கு தயாரிப்பாளர் போட்ட ரெட் சிக்னல் தொடர்வதால், க்ரீன் சிக்னல் கிடைக்கும் வரை ஓய்வெடுக்கிறேன் எனக் கூறி நாயகன் அஜித் தனது மகளுடன் விளையாடி பொழுதுபோக்கி வருகிறாராம்.